Wednesday 28 June 2017

புகைப்பங்கள் சொல்லும்தைள்...! 

இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.


இங்கு வெளிநாட்டில், ஆறுதலாக நண்பர்கள் வீட்டுக்குப் போயிருந்து, ஆல்பம் பார்த்து, கதை பேச எல்லாம் நேரம் இல்லை. எல்லாமே இயந்திரமயம்..! ஆதலால் அன்பு நண்பர்களாகிய உங்களிடம் கதை பேசுவதில் மகிழ்ச்சி எனக்கு..!

போகலாமா....?

01, வெளிநாடு வருவதற்காக, மகள் இலக்கியா கொழும்பில் தங்கியிருந்த போது எடுத்த படம் இது. என்னுடைய அம்மா, தன் பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறா. எனக்கு மிகவும் பிடித்த படம் இது.


02, இது  எனது மகளும் அவவின் தோழி யுசுசுலினாவும். இந்தியாவின் கோவாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கிறார்கள். அவர்களும் நாங்களும் குடும்ப நண்பர்கள். அவர்களுக்கு தமிழ் தெரியாது. நாங்கள் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் உரையாடிக் கொள்வோம். அவர்களின் பிள்ளைதான் யுசுசுலினா.


அவர்கள் கிறிஸ்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களின் சேர்ச்சிலே நடந்த விழா ஒன்றிலே மகளும் கலந்து கொண்டார். அப்போது எடுத்த படம் இது.

03, பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனும் அவரது மனைவியும் - இந்த மாதம் 10 ம் திகதி அவர்களின் சொந்தக் கிராமத்துக்கு வாக்களிக்கச் சென்றிருந்தார்கள். அன்று மாலை சைக்கிளை எடுத்துக் கொண்டு, வயல்வெளிகள் எங்கும் ஓடித்திரிந்தார்களாம். அதனை இங்கு வெளியாகும் Paris Match எனும் புலனாய்வுப் பத்திரிகை படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள். அழகான ஜோடி இல்ல..? - எனக்கு மிகவும் பிடித்த ஜனாதிபதி மக்ரோன்..!


04, இது இலங்கையில் - எங்கள் கிராமத்தில், சைனாக்காரன் போட்டுக்கொடுத்த தார் வீதி. நான் அங்கு இருந்த காலத்தில் குன்றும் குழியுமாக இருந்த ரோட்டு இப்போது பளபளப்பாகியுள்ளது. இந்த வீதியில் எத்தனையோ கதைகள் உள்ளன. இப்படியே நேரே போனால் முல்லைத்தீவு வரும்...!!



05, இந்த அழகான திமிங்கிலத்தை இங்கு பரிசில் உள்ள பூங்கா ஒன்றிலே செய்து வைத்திருக்கிறார்கள். இன்று புதன்கிழமை அந்த ஏரியாவுக்கு ஒரு அலுவலாகப் போனேன். உடனேயே க்ளிக்கி விட்டேன். செமயா இருக்குல்ல..?


06, இந்தவாரம் பிரான்ஸ் முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. இங்குள்ள பேருந்து சாரதிகள்,’ நாங்கள் கட்டைக் காற்சட்டை போட்டுக்கொண்டு வேலைக்கு வரலாமா?’ என நிர்வாகத்திடம் கேட்க, ‘நோஓஓஓஒ சட்டத்தை மீற முடியாது. நீங்கள் முழுநீள ஜீன்ஸ்தான் அணிய வேண்டும்’ என நிர்வாகம் கறார் காட்ட, கொதித்தெழுந்த சாரதிகள், ‘பெண்கள் பாவாடை போடலாம். நாம போட்டா என்ன?’ என கேள்வி கேட்டதோடு நில்லாமல், நல்ல அழகான பாவாடைகளுடன், பேருந்து ஓடினார்கள்.


இங்கு பிரான்சில் இப்படி என்றால், அங்கே லண்டனில் பாடசாலை ஆண் மாணவர்கள் ‘நாங்களும் பாவாடை போடுவம்ல’ என்று கிளம்பி, பாவாடையோடு பள்ளிக்கூடம் போல மிரண்டு போனார்கள் நிர்வாகத்தினர். அவர்களின் படத்தைத் தான் கவர் படமாகப் போட்டுள்ளேன்.

இப்படி இருக்கு இங்குள்ள நிலைமை :) :)


36 comments:

  1. படங்களுடன் சுவாரஸ்யமான
    செய்திகள் மிகச் சுருக்கமாக எனினும்
    நிறைவாக....
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி ஐயா...மிக்க நன்றி அன்புக்கும் வாழ்த்துக்கும் :)

      Delete
  2. உங்கள் தளத்தின் வழக்கம் என்ன என்றால் திறக்கும் போது இடது ஓரம் காணப்படுகிறது! முதல் பின்னூட்டம் இட்டவுடன் நடுவுக்கு வந்து விடுகிறது!!!!! ஏன்? எனக்கு மட்டும்தான் அப்படியா?

    :))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா வாங்கோ ஶ்ரீராம்... இது என்னமோ பில்லி சூனியம் போல :) :) நான் வேற மண்டை ஓட்டு மியூசியம் எல்லாம் போய் வந்து படங்கள் போட்டிருக்கிறன் தானே? அதான் என்னமோ ஆச்சு :)

      ஆமா, இந்தச் சிக்கலில் எந்த browser க்கு வருது ஶ்ரீராம்?

      Delete
  3. முதல் புகைப்படம் நானும் பார்த்தேன். புன்னகைத்தேன்.

    பாட்டி பேத்திக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அன்பு!

    யுசுசுலினா - வித்தியாசமான பெயர்! என்ன அர்த்தம்?

    மக்ரோன்! எளிமையான மனிதர். அந்தப் பெயரைக் கேட்டால் ஒரு தின்பண்டத்தின் நினைவு வருகிறது எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. யுசுசுலினாவின் அர்த்தம் கேட்டுச் சொல்கிறேன் ஶ்ரீ...

      மக்ரோன் பேரில் தின்பண்டமா? அடடே, என்ன அது? போட்டோ இருக்கா? :)

      Delete
    2. தூத்துக்குடி மக்ரூன் என்று கூகிள் ஆண்டவரிடம் கேளுங்கள். முந்திரி, ஜீனி சேர்த்து அரைத்து bake பண்ணுவதுபோல் செய்வது.

      Delete
    3. அப்படியா? வித்தியாசமா இருக்கே..? இதோ கூகுளிடம் போகிறேன் :)

      Delete
  4. கொழும்பு சாலை அழகு.

    முறைக்கும் திமிங்கிலம்!

    ReplyDelete
    Replies
    1. முல்லைத்தீவு சாலை ஶ்ரீ...! கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருந்தோம்.

      Delete
  5. கடைசிப் படமும், முதல் படமும் அடுத்தடுத்து வந்திருக்க வேண்டிய படங்கள், செய்திகள்!

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஶ்ரீராம்... கவர் படம் போடணும்கறதுக்காக அங்க தூக்கி போட்டுட்டேன் :) :)

      Delete
  6. அனைத்துப்படங்களும் அருமை றஜீவன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி, மிக்க நன்றி

      Delete
  7. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அசோகன் ஸார். G + இலும் கமெண்ட் பண்ணி இருக்கீங்க... நன்றி நன்றி

      Delete
  8. அறிந்திராத செய்தி ஜி... நன்றி...

    ReplyDelete
  9. ஒவ்வொரு படத்தின் பின்னும் பல கதைகள் இருக்கு. நல்ல ஐடியா... தொடருங்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ... ஒவ்வொரு போட்டோக்களும் எத்தனையோ கதைகளைச் சொல்லும்..! அவை ஒவ்வொன்றையும் பகிர்வதிலே மகிழ்ச்சிதான்..!

      Delete
  10. படங்களை ரசித்தேன் ,நல்ல வேளை,பாவாடையாவது போட்டுக்குவோம் என்று சொன்னார்களே :)

    ReplyDelete
  11. எல்லாமே ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.!

      Delete
  12. படம் பார்த்து கதை சொல்.; என்பார்கள். ஆனால் நீங்களே கதையை அழகாய் சொல்லிவிட்டீர்கள். படங்களும் அருமை. கதையும் (விளக்கமும்) அருமை. பாராட்டுகள்!

    ReplyDelete
  13. படங்களும் செய்திகளும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன. நன்றி.
    [மிகவும் தாமதமாக இப்பதிவை வாசிக்கிறேன் வழக்கம்போல]

    ReplyDelete
  14. அழகான படங்கள். பாவாடை கட்டிப்பார்க்க அவர்களுக்கும் வழிகிடைத்துவிட்டது)) உண்மையில் வெப்ப நேரத்தில் அதுவும் ஓட்டுனர்களுக்கு இயந்திரவெப்பம் அவர்களுக்கு அதிக அயர்ச்சியைத்தரும் என்பதால் வரவேற்கலாம்))) .

    ReplyDelete
  15. மக்ரோனுக்கும் சொந்த ஊரில் சைக்கிள் ஓட்ட ஆசை இருக்காத என்ன? ))) இந்த பொதுவாழ்க்கையில் சில ஆசைகளையும் துறக்க வேண்டிய நிலையில் பலர்)).

    ReplyDelete
  16. அட சொந்த ஊரில் இருந்து நேரே முல்கைத்தீவுக்கு போகும் வழியை இப்போதுதான் பார்க்கின்றேன்)))

    ReplyDelete
  17. புகைப்படங்கள் கதை எல்லோருக்கும் உண்டு. இருந்தாலும் அழகுற பகிர்ந்து கொண்டது, இப்படியும் செய்யலாமே என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. செய்தியும் படங்களும் அழகு. அன்புடன்

    ReplyDelete
  18. பாட்டி, பேத்தியின் அன்பு படம் மிக அருமை.
    புகைப்படங்களை பார்க்கும் போது அது எப்போது எடுத்தது யார் எடுத்தது என்று எண்ணம் ஓடும்.
    புகைபடங்கள் சொல்லும் கதைகள் அருமை.

    ReplyDelete
  19. அருமை நண்பரே
    நீங்கள் இலங்கையரோ

    ReplyDelete
  20. என்னடா பசங்க எல்லாம் பொண்ணுங்க மாதிரி குட்டை பாவாடை அணிந்திருக்கிறார்களே என்று நினைத்தேன். சுவாரஸ்யம்.
    அந்தக் கால மகாராஜாக்கள் இப்படித்தான்பெண்களின் பாவாடை போலத்தான் உடை அணிந்திருந்தார்கள் போல. இப்போதும் கூட எகிப்திய ஆண்கள் வீட்டில் பெண்கள் அணியும் நைட்டி போன்ற உடைதான் அணிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  21. அழகான படங்களும்...அருமையான செய்திகளும்...

    முதல் முறை தங்கள் தளத்தில்...


    ReplyDelete
  22. சீனா ரோடு அருமை ...ஆனால் இதில் ஒரு குறைபாடு உள்ளது.....இதுவே இந்தியா போட்டிருந்தால் போக்குவரத்திற்கும் பயன்படும்...அதேநேரத்தில் ''பல்லாங்குழி'' விளையாடுவதற்கும் பயன்படுத்தியிருக்க முடியும்.!...

    ReplyDelete