இந்த ஆண்டு ஜனவரி 31 ம் திகதி அன்று என் ஃபேஸ்புக்கில் ( ஃபேஸ்புக்கை முகநூல் என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ) எழுதிய பதிவை இங்கே மீள வெளியிடுகிறேன்.
'எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே தீருவது' என்கிற தீர்க்கமான முடிவோடு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான நேர்முகத் தேர்வுக்கு கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் ( 12 ம் திகதி ) போயிருந்தேன்.