என்று யார் சொன்னது?
நீ இங்குதான் இருக்கிறாய்..
உன் பேச்சு, சிரிப்பு, எழுத்து,
கோபம், அழுகை, கொஞ்சல்
எல்லாமே அப்படியேதான்
இருக்கின்றன..!
நீ அனுப்பிய முதல் மெயில்,
முதல் போட்டோ,
முதல் பரிசு..
இப்படி எல்லாமே
என்னோடுதான் இருக்கின்றன.
பழைய மெயில்களை
வாசிப்பதும்
போட்டோக்களை
மீண்டும் மீண்டும்
பார்ப்பதும்,
உன் குரல் தாங்கிய
ஒலிப்பதிவுகளை
மீள மீளக் கேட்பதும்
சுகம் என்றால் சுகம்
அப்படி ஒரு சுகம்..!
யார் சொன்னது
நீ என் அருகில்
இல்லை என்று...?
உன்னோடு எடுத்த
புகைப்படங்கள்,
நீ உலாவிய தெருக்கள்,
நீ கும்பிட்ட கோயில்கள்
எல்லா இடமும்
அடிக்கடி போவேன்.
அந்த இடங்களில் எல்லாம்
உன் மூச்சுக் காற்று உண்டு..
உன் கலகல சிரிப்பு
அங்கே உண்டு... கூடவே
உன் வாசமும்
உண்டு..
கேசவன் வேறு
அடிக்கடி உன்னை
விசாரிப்பார் :) :)
அந்த தொப்பை ட்ரைவர்
‘பயணம் எப்ப?’ என்பார்..!
** ** **
உன்னைப் பிரிந்து விட்டதாய்
நான் நினைக்கவே இல்லை..!
அது சாத்தியமும் இல்லை..!
கூகுள் மேப்பில் அடிக்கடி
உன் வீட்டை
எட்டிப் பார்ப்பேன்
அது என்ன வீதியில்
வெள்ளை வெள்ளையாய்
பெட்டிகள் வைத்திருக்கிறார்கள்? கர்ர் :)
அந்த நீல நிற ஜீப்
அது இன்னும் அங்குதான் நிற்கிறது :) :)
உன்னோடு வாழந்த
காலங்களைப் போலவே
உன்னை நினைத்து
ஏங்கி வாழும்
இந்த வாழ்க்கையும்
எனக்குப் பிடித்தே உள்ளது.
காரணம் இங்கும் நீதானே
இருக்கிறாய்....!!
இதோ உன்
பழைய மெயில் ஒன்றை
எடுத்து வைத்துவிட்டுக்
காத்திருக்கிறேன்..
அதை வாசித்துவிட்டுத்
தூங்க வேண்டும்..
நிம்மதியான தூக்கம் வரும்
எனக்கு....!!!
ஆகா...! நினைவுகளே சுகமாய்...!
ReplyDeleteநினைவுகள் தான் வாழ்க்கையாகவும் ஜீ :)
Deleteநினைவுகள் சங்கீதமே...
ReplyDeleteஉண்மைதான் ஜீ,
Deleteஒருவரோடு வாழ்வது எப்படி சுகமானதோ அதேபோன்றது அவர் நம்மோடு வாழ மறுக்கும்போது, அவரோடு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வாழ்வதும்
நினைவுகள் எப்போதும் தாலாட்டும் சங்கீதம். . பிரியமானவர்கள் உடலினால் பிரிந்தாலும் அன்பில் பிரிவதில்லை.
ReplyDeleteஉண்மைதான். உடல்கள் பிரிந்தாலும் பழகிய காலங்களும் நினைவுகளும் என்றும் மறக்க முடியாதவை..!!
Delete