கேட்க வேண்டும்
போலுள்ளது.
சிரித்துச் சிரித்து நீ
பேசும் அழகு
அற்புதமானது.
அந்தச் சிரிப்பு
என் காதில் விழுந்து
ஆண்டுகள் சில ஆச்சு.
ஆயிரம் முறை
உன் தொலைபேசிக்கு
அழைத்திருப்பேன்.
ஒரே ஒரு முறையாவது
பதில் பேச மாட்டாயா?
என்று மனம் ஏங்கும்.!
கோபத்தோடு என்றாலும்
ஒரு பதில் சொல்ல மாட்டாயா?
என மனம் துடிக்கும்.
என்னோடு நீ
கொஞ்சிப் பேசிய
காலங்களை எல்லாம்
நினைத்து நினைத்துப் பார்ப்பேன்.
எல்லாமே
தேனாக இனிக்கும்..!
ஒவ்வொரு முறையும்
மின்னஞ்சல் அனுப்பிவிட்டு
உன் பதிலுக்காய்
ஆயிரம் முறை
திறந்து பார்ப்பேன்.
பதிலே இருக்காது.
ஒரே ஒருமுறை
அந்தக் குரலை
நான் கேட்க வேண்டும்.
கவலையா இருக்கு எனக்கு...!
உன் நினைவுகள் மனதை
வாட்டும்போதெல்லாம்
எங்கோ ஒரு
தொலைவுக்குச் சென்று
காட்டோர தொடரூந்து நிலையத்தில்
அமர்ந்து கொள்வேன்.
உன்னோடு எடுத்த
புகைப்படங்களைப் பார்த்து
மனதை தேற்றிக் கொள்வேன்.
ஒரு தூக்குத் தண்டனைக்
கைதிக்கு கூட
கடைசி ஆசையை
நிறைவேற்றுவார்கள்...
அந்த வாய்ப்பு கூட
எனக்கு இல்லையா...?? :(
எனக்கு இல்லையா...?? :(
உன் குரல் கேட்கும்
நாள் ஒன்றுக்காய்
காத்துக் கொண்டே
இருக்கிறேன்....!!
இருக்கிறேன்....!!
#ஒரு தூக்குத் தண்டனைக்
ReplyDeleteகைதிக்கு கூட
கடைசி ஆசையை
நிறைவேற்றுவார்கள்...#
இது உண்மை தானா ஜி :)
வாங்கோ பகவான் ஜீ வாங்கோ...
Deleteகடைசி ஆசை பெரும்பாலும் நிறைவேற்றுவார்கள் என்றுதான் கேள்விப்பட்டேன். எதற்கும் ஒருமுறை சரிபார்க்கிறேன். நன்றி ஜீ - கூப்பிட்டவுடன் ஓடி வந்தமைக்கு -
ஏன இவ்வளவு விரக்தி ???
ReplyDeleteவாங்கோ கில்லர் ஜீ... என்ன பண்ண? வாழ்க்கை அப்படியாகிவிட்டது. மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.
Deleteஉங்கள் தளத்தில் ஃபாலோவர் வைக்கலாமே... பதிவு வெளியாவது தெரியவில்லை நண்பா.
ReplyDeleteவலப்பகம் ஒரு விட்ஜெட் வைத்திருக்கிறேனே ஜீ... அதைத்தானே சொல்றீங்க?
Deleteஅப்புறம் டெயிலி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். அப்பப்ப எட்டிப் பாருங்க ஜீ :)
நீங்கள் தேடும் குரல் விரைவில் அலைபேசியில் பதில் பேசட்டும்.கவிதை அழகு!
ReplyDeleteஉங்கள் பொன்னான வாக்கு பலிக்கட்டும் பாஸ் :)
Delete