Wednesday, 28 June 2017

புகைப்பங்கள் சொல்லும்தைள்...! 

இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.


Monday, 26 June 2017

ஒருநாளும் உனைமறவாத.....!!

’கரு தருவது நாங்கள். கதை எழுதுவது நீங்கள்’ என்றார்கள் ‘நம்ம ஏரியா’ ப்ளாக் நண்பர்கள். அவர்கள் கரு தர, அதற்கு நாம் கதை எழுதுவது, ஒரு சுகமான அனுபவம். முன்பு அவர்கள் தந்த கரு  இங்கே - அதற்கு நான் எழுதிய கதை - இங்கே

Monday, 19 June 2017

புதிம் பார்க்கலாம் வாங்கோ....!

நண்பர்களே, நீங்கள் எல்லோரும் என் வீட்டுக்கு வந்தால், என்னுடைய ஆல்பத்தைக் காட்டுவேன் இல்லையா? நண்பர்கள், உறவினர்களுக்கு ஆல்பம் காண்பிப்பதே ஒரு சுகமான அனுபவம் தான். ஒவ்வொரு போட்டோவையும் காண்பித்து, அது தொடர்பான கதைகளைப் பகிர்வதில் அப்படி ஒரு சுகம்.


Saturday, 17 June 2017

கோப்பக்ற்றுக் கொடுங்கள்...!!

ஃபேஸ்புக்கில் முன்பு ஒருநாள் எழுதிய Funny கவிதை. அடிக்கடி வாசித்து நானே சிரிப்பேன். இதோ இன்று  உங்களிடம் தந்துவிடுகிறேன்.

நீங்க படிச்சே ஆகணும் :) :)
விதி யாரை விட்டது? :) :)Friday, 16 June 2017

ங்கே லும்புள் விற்கப்படும்....!

பிரான்சில் தலைநகர் பரிசிலே, நிலத்துக்கு கீழே 250 கிலோமீட்டர் நீளத்துக்கு மனித எலும்புக் கூடுகள் அடுக்கி வைத்துள்ளார்கள் என்று கடந்த வாரம் பதிவு போட்டிருந்தேன் அல்லவா?  என்னது மறந்துட்டீங்களா? - அப்டீன்னா இவ்டே :) :)  க்ளிக் செய்து ஒரு எட்டுப் பார்த்துட்டு வாங்க..!!

தனியே மனிதனுடைய எலும்புக் கூடுகளை மட்டும் மியூசியத்தில் வைத்தால் ஏனைய விலங்குகள் கோபித்துவிடும் அல்லவா?


Thursday, 15 June 2017

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்....!

தலைப்பில் உள்ளது போல பாட வேண்டும் போலிருந்தது, பரிசில் உள்ள இந்த மியூசியத்துக்குப் போன போது.....!!


Wednesday, 14 June 2017

அந்த ஒரு நொடிக்காக....!!

நம்ம ஏரியா  தளத்திலே கருவுக்கு கதை எழுதும் போட்டிக்கு அழைத்திருந்தார்கள். அதில் சொல்லப்பட்ட கருவை எடுத்து, என் கற்பனையைச் சேர்த்து எழுதியதை இங்கே தருகிறேன் நண்பர்களே...!!

நம்ம ஏரியா Team க்கு எனது நன்றிகள்.


Tuesday, 13 June 2017

போட்டோவும் டேட்டாவும்...!

வணக்கம் நண்பர்களே,

போட்டோவும் அதனுடன் தொடர்புடைய Data வையும் சேர்த்து வழங்கும் இப்பதிவுக்கு அன்போடு வரவேற்கிறேன். போட்டோகிராபி என்றால் எனக்கு அவ்வளவு விருப்பம். செடி, கொடி, மரம், ரெயில், தண்டவாளம்...... இப்படியாக பல்லாயிரம் போட்டோக்கள் குவிந்துள்ளன என்னிடம்.. :) :)

Sunday, 11 June 2017

வுள் பிரிதில்லை....!

பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது என்கிறது ஒரு சினிமாப் பாடல். அது உண்மை என்றுதான் நானும் நம்புகிறேன் - உண்மையான பாசமாக இருந்தால்....!!Thursday, 8 June 2017

ந்தள்ளிரவு நெடுஞ்சாலை.....!

நள்ளிரவு தாண்டிய அந்த
நடுநிசிப் பொழுதில்,
நீண்ட நெடுஞ் சாலையோரம்
நீயும் நானும் நடந்தோம்..!

Tuesday, 6 June 2017

ன்னுனே நீ பேசினால் வாய் முத்து உதிர்ந்து விழுமோ? :) :) 

இந்தக் கதையைக் கேட்டீர்கள் என்றால் சிரிப்பீர்கள். எனக்கு இப்ப எல்லா சினிமா பாட்டுக்களும் போரடித்து விட்டது :) :)Monday, 5 June 2017

பயப்பிடாம வாசிக்கணும்..! ஓகே வா?

”வெளிநாடு என்றால் வான் முட்டும் கட்டிடங்களும் பளபளப்பான சாலைகளும் நிறைந்த ஒரு கனவு உலகமாக இருக்கும்” என்ற கற்பனையோடு பாரிஸ் நகரில் வந்து இறங்கினால், இங்குள்ள குப்பை கூழங்களையும் பாசி படிந்த கட்டிடங்களையும் பார்த்து “ஷாக்” ஆகிவிட்டேன். 

Saturday, 3 June 2017

ரிளிப்பும்ட்டளிப்பும்


நண்பர்களே,

எமது ஆங்கிலக் கல்லூரியில் கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் நடத்தினோம். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எமது கல்லூரி செயல்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயார் செய்து, அவர்கள் சிறந்த பெறுபேறுபெற உதவுகிறோம்.


Friday, 2 June 2017

திவர்களுக்குப் பரிசு - ஓடிவாங்கோ ஓடிவாங்கோ 

ணக்கம் நண்பர்களே, அன்பர்களே :)

இது என்னுடைய 16 வது பதிவு. கடந்த பதினைந்து பதிவுகளில் எனக்கு ஆதரவும் அன்பும் வழங்கிய நண்பர்களுக்கு பரிசு கொடுக்கலாமே என்று ஒரு சின்ன ஆசை. முதல்முறையாகப் பரிசு கொடுப்பதால், மங்களகரமாக இருக்கட்டுமே என்று பூக்களைப் பரிசாகத் தருகிறேன் :) :)


Thursday, 1 June 2017

ளைச் சிரிக்க வைக்ப் போகிறேன்

வளை 
அழ வைப்பது போலவே,
சிரிக்க வைப்பதும்
சுலபமானது!

“உம்” என்றால் அழுவாள்!
“உஷ்” என்றால் சிரிப்பாள்!!Wednesday, 31 May 2017

படித்து ரசித்த தத்துவங்கள்...!!

தத்துவங்களைப் படிப்பதுபோல ஒரு சுகமான அனுபவம் வேறேதும் உண்டா? அதுவும் வாழ்க்கை சோகமாக இருக்கும் போது, ஏமாற்றங்கள் மீண்டும் மீண்டும் வரும்போது, நாம் படிக்கும் ஒவ்வொரு தத்துவமும் தேனாய் இனிக்கும்..!


Tuesday, 30 May 2017

உன் குரல் கேட்கும் நாள் ஒன்றுக்காய்....!!

உன் குரல்
கேட்க வேண்டும் 
போலுள்ளது. 

சிரித்துச் சிரித்து நீ 
பேசும் அழகு 
அற்புதமானது. 


Saturday, 27 May 2017

எங்காவது ஓடிடலாமா?

ங்காவது ஓடிடலாமா? என்று தோன்றும் அளவுக்கு வாட்டி எடுத்தது இன்றைய பரிஸ் வெயில்..!

நாளை ஞாயிற்றுக்கிழமையும் இதே வெப்பநிலைதான். பொதுவாக கோடை காலத்தில்தான் இப்படி வெப்பம் வாட்டும். ஆனால் இம்முறை வசந்த காலத்திலேயே  வாட்டத் தொடங்கி விட்டது.


இன்றைய சனிக்கிழமைப் பொழுதை பரிசில் உள்ள பார்க் ஒன்றில் கழித்தோம். நீங்களும் வாருங்களேன் பார்க் பார்க்க...!

Friday, 26 May 2017

அது ஒரு சுகம்....!

ன்னருகில் நீ இல்லை
என்று யார் சொன்னது? 

நீ இங்குதான் இருக்கிறாய்..
உன் பேச்சு, சிரிப்பு, எழுத்து,
கோபம், அழுகை, கொஞ்சல்
எல்லாமே அப்படியேதான்
இருக்கின்றன..!

Thursday, 25 May 2017

அழகான லூர்து நகர் - போவோமா?

பிரான்சுக்கு வரும் எல்லோருமே செல்ல விரும்பும் இடம் புனித மரி அன்னை வீற்றிருக்கும் லூர்து நகர். அங்கே தெய்வீகம் ஒரு பக்கம், இயற்கையின் அழகு இன்னொரு பக்கம்..!  சில்லென்று காற்று வீடும் அழகிய மலைச்சாரல் நிறைந்த இடம்.

வாருங்கள் இன்று லூர்து நகரைச் சுற்றி வருவோம்.


Tuesday, 23 May 2017

பரிஸ் சுத்திப் பார்க்கலாம் வாங்கோ :)

வணக்கம் நண்பர்களே..

இங்கே பரிசில்  இப்போது இளவேனில் காலம். இந்த அழகிய இளவேனில் காலத்தின் காட்சிகள் சில எனது கமெராவின் வழியாக உங்களுக்காக...!!


Friday, 19 May 2017

கூட்சு வண்டியிலே ஒரு காதல் வந்திரிச்சு...

வணக்கம் நண்பர்களே...

போட்டோ எடுப்பது என்னுடைய முக்கியமான ஒரு பொழுது போக்கு.. அதிலும் ட்ரெயின்களை எடுப்பது என்றால்.. சொல்லவே வேண்டாம்... என்னிடம் இருக்கும் பல்லாயிரம் போட்டோக்களில் அதிகம் இடம்பிடித்திருப்பது ட்ரெயின்கள் தான்..!


Wednesday, 17 May 2017

ஒரு விசித்திரமான வழக்கு

அதோ நீதிபதி 
வந்துவிட்டார்..!

எல்லோரும் எழுந்து 
நிற்கிறார்கள்..!

பொல்லாத நீதிபதியாம்..!
ஒருமுறை தீர்ப்பு சொன்னால்
அதில் மாற்றமே இல்லையாம்..!
Tuesday, 16 May 2017

பேப்பர் என்பது தமிழா?

ங்கில வகுப்பில் Passive Voice கற்பித்துக் கொண்டிருந்தேன்..! This area is protected by....... என்று ஒரு வசனம்..!

திடீரென்று ஒரு மாணவி கேட்டார்.

"மாஸ்டர், ஏரியா என்று ஏன் தமிழில் சொல்றீங்கள்?"


எனக்குப் புரிந்துபோனது. 'ஏரியா' ஒரு தமிழ்ச் சொல் என்று அந்த மாணவி நினைத்துவிட்டா. பின்னர் நான் தெளிவாக விபரித்தேன். 'நாங்கள்  தமிழ் பேசும்போது ஆங்கிலச் சொற்களும் கலந்துதான் பேசுவோம். ஏரியா என்பது தமிழ் இல்லை. ஆங்கிலம் தான்."

Monday, 15 May 2017

எந்தக் கேள்வி கேட்டாலும்.......!!

இந்த ஆண்டு ஜனவரி 31 ம் திகதி அன்று என் ஃபேஸ்புக்கில் ( ஃபேஸ்புக்கை முகநூல் என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ) எழுதிய பதிவை இங்கே மீள வெளியிடுகிறேன்.

'எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே தீருவது' என்கிற தீர்க்கமான முடிவோடு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கான நேர்முகத் தேர்வுக்கு கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் ( 12 ம் திகதி )  போயிருந்தேன்.

Sunday, 14 May 2017

முதல் பதிவு : ஆலயம் தொழுவது....!

வணக்கம் நண்பர்களே..

மூன்று பரிசோதனைப் பதிவுகளைத் தொடர்ந்து, இதோ என்னுடைய முதலாவது பதிவை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.

பிரான்சிலே 13 மாகாணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் - ils de France.
இந்த மாகாணத்தில் 8 மாவட்டங்கள் உள்ளன. அதில் ஒரு மாவட்டம் தான் பரிஸ். உண்மையில் பரிஸ் ஒரு நகராகவும் அதேவேளை மாவட்டமாகவும் உள்ளது. இதன் இலக்கம் 75 ஆகும்.!


Saturday, 6 May 2017

பரிசோதனைப் பதிவு 3 : 24 ஆண்டுகள் 8 மாதங்கள்....!

ரிசில் இருந்து 152 கிலோமீட்டர் வடக்கே உள்ளது Amiens எனும் நகரம். அங்கிருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், தனது 15 வயது மகனை கோபத்தோடு அழைத்து எதையோ சொல்லிக் கண்டிக்கிறார்.


Friday, 5 May 2017

பரிசோதனைப் பதிவு 2 : மக்ரோன் Vs லு பென் - அனல் பறந்த தொலைக்காட்சி விவாதம் - ஒரு பார்வை

12 கமெராக்கள், 19 பாகை வெப்பநிலை நிலவிய அரங்கு, 2.5 மீட்டர் நீளமான மேசை - அதன் வலதுபுறத்தில் இம்மானுவல் மக்ரோனும் இடதுபுறத்தில் மரின் லு பென்னும் அமர்ந்திருக்க, வரலாற்று முக்கியத்துவம் மிக்க தொலைக்காட்சி விவாதம், நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிற்று.


TF1, France2, BFMTV, Cnews என பிரான்சின் முன்னணித் தொலைக்காட்சிகள் அனைத்துமே இந்த விவாதத்தை ஒளிபரப்ப, RMC, RTL, France info, RFI என சக வானொலிகளும் ஒலிபரப்ப, 20 க்கும் மேற்பட்ட Youtube Channel இல் Live கள், ஃபேஸ்புக் லைவ்கள் என திரும்பும் திசை எங்கும் ஆக்கிரமித்து நின்றது இந்த அதிரடி விவாதம்.

Tuesday, 2 May 2017

பரிசோதனைப் பதிவு 1 : தமிழில் 24 மணிநேர செய்தி வானொலி...!

ப்படி ஒரு வானொலி வராதா? என்பது எனது நீண்டநாள் ஆசை.

தமிழில் 100 க்கும் மேற்பட்ட வானொலிகள் உள்ளன. இதில் ஈழத்தமிழர்கள் நடத்தும் வானொலிகள்தான் அதிகம். 24 மணிநேரமும் இந்த 100 வானொலிகளும் செய்யும் ஒரே வேலை - பாட்டு போடுவதும், 'சாப்பிட்டீங்களா? குளிச்சீங்களா? நித்திரை கொண்டீங்களா?' வகையறா கேள்விகள் கேட்பதும்தான். உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கு இப்ப 'சாப்பிடுவதும் குளிப்பதும்தான்' பிரச்சனையா?