வணக்கம் நண்பர்களே,
போட்டோவும் அதனுடன் தொடர்புடைய Data வையும் சேர்த்து வழங்கும் இப்பதிவுக்கு அன்போடு வரவேற்கிறேன். போட்டோகிராபி என்றால் எனக்கு அவ்வளவு விருப்பம். செடி, கொடி, மரம், ரெயில், தண்டவாளம்...... இப்படியாக பல்லாயிரம் போட்டோக்கள் குவிந்துள்ளன என்னிடம்.. :) :)
அவற்றில் இருந்து ஒரு ஐந்து போட்டோக்களைப் பார்க்கலாம் வாங்க..!
01, இங்குள்ள பிரபல புத்தக சாலைகளில் பிரெஞ்சு மொழியில், ஏராளமான இந்துசமய நூல்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். மஹாபாரதம், இராமாயணம், பகவத்கீதை, அர்த்த சாஸ்திரம், திருக்குறள் என ஏராளமான நூல்களை பிரெஞ்சு மொழியில் பார்க்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கும். இது நேற்று எடுத்த படம்..!!
02, சாலையோர மரங்களின் கீழே இப்படியான ‘வீடு’ வடிவிலான பெட்டிகள் வைத்திருக்கிறார்கள். உள்ளே இருப்பவை புத்தகங்கள். தெருவில் நடந்து போகும்போது, மர நிழலின் கீழ் நின்று எதையாவது படிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், உடனே கை கொடுக்கும் இந்த ‘இன்ஸ்டண்ட் லைபிரரி’
பிரெஞ்சு அரசின் இந்த சூப்பர் ஐடியாவுக்கு ஒரு சல்யூட்
03, அண்மையில் பரிசில் இருக்கும் நிலக்கீழ் தொடரூந்து நிலையம் ஒன்றில் ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக, தரையில் இருந்து பல அடி ஆழத்தில், பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொள்ள நேரிட்டது. அதில் அடியேனும் ஒருவன். சிறிது நேரத்தில் சுவாசிப்பதே சிக்கலாக இருந்தது.
ஆனால், பிரெஞ்சுப் போலீஸ் மின்னல் வேகத்தில் செயல்பட்டு எம்மையெல்லாம் பத்திரமாக வெளியே கொண்டு வந்து விட்டார்கள்.
04, கடந்த வாரம் இங்கு பரிசில் உள்ள Notre Dame தேவாலயத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. சம்பவம் நடந்த வேளையில் நானும் மகள் இலக்கியாவும் அங்கு ஒரு கடையில் ஐஸ்கிறீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம் :) :)
தாக்குதல் சத்தம் கேட்டு எல்லோரும் அலறியடித்து ஓடினர். எனக்கோ சம்பவத்தைப் போட்டோ எடுக்க வேண்டும் போல தோன்றியது. ( காரணம் நான் வேலை செய்யும் மீடியாவுக்கு அனுப்பினால் பொஸ் நிறைய சம்பளம் தருவார் அல்லவா? )
உடனே மகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு கிட்ட நெருங்கி போட்டோக்கள் எடுத்தேன். பொலீசார் துப்பாக்கிகளை கையிலே எடுத்து சுடும் நிலையில் இருந்தார்கள். நமக்கு அதுவா முக்கியம். போட்டோதானே முக்கியம்? :) :)
பிறகு இந்தச் சம்பவத்தை ஊரில் இருக்கும் அம்மாவிடம் சொன்னபோது, அம்மா கிழி கிழி எண்டு கிழிச்சது தனிக்கதை :) :)
05, கடந்த வாரங்களில் பரிசை வெயில் வாட்டி எடுத்தது. நண்பர் ஒருவருக்கு பியர் குடிக்கும் ஆசை வந்தது. உடனே வீட்டில் இருந்த சறத்தோடு புறப்பட்டு விட்டார் சூப்பர் மார்க்கெட்டுக்கு :) :) போட்டோவைப் பார்த்து ஒரே சிரிப்புத்தான்.
இப்படம் நான் எடுக்கவில்லை. நண்பர் ஒருவர் எடுத்தது.
என்ன நண்பர்களே இன்றைய போட்டோவும் டேட்டாவும் உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? :) :)
படங்கல் அரருமை நண்பரே
ReplyDeleteவாங்கோ சகோ முஹம்மட்.. முதல் முறையாக வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் :)
Deleteநண்பரே எனது ப்ளாக் தமிழில் கணணி தகவல்கள் நேரம் இருந்தால் வண்து பார்க்கவும்
Deleteநன்றி
நிச்சயமாக வந்து பார்க்கிறேன் சகோ. I love technology
Deleteலுங்கி கட்டிய போட்டோவை ரசித்தேன்
ReplyDeleteஹா ஹா எனக்கும் அது பிடிச்சிருந்தது
Deleteமரநிழலில் புத்தகங்கள். ஆச்சர்யம் + சுவாரஸ்யம். சுரண்டிக் கொண்டு போகாமல் இருக்கிறார்களே.. ஆனால் இப்போது இந்தியாவில் கூட இப்போது ஓரிரு இடங்களில் தனியார் முயற்சியில் அப்படி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
ReplyDeleteகலவர இடங்களில் போட்டோ எடுத்தால் கடுப்பில் துப்பாக்கியை நம்பக்கம் திருப்பி விட மாட்டார்களே...?!!!
போட்டோ எடுக்க இங்கு பெரும்பாலும் தடை இல்லை சகோ. கலவரம் தீவிரமாக இருந்தாலும் பொலீஸ் மிகவும் நிதானமாகவே நடந்துகொள்வார்கள். அதனால் பயமில்லை..!
Deleteசாரத்துடன் அங்காடிக்கு போனவர் படம் மிகவும் அழகு)) சாரம் கட்டுவது கூட தனிச்சுகம்.
ReplyDeleteசாறம் கட்டுவதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை பாஸ் :)
Deleteபுத்தகவாசிப்பை அதிகரிக்க பிரெஞ்சு அரசு செய்யும் செயல் மிகவும் பாராட்ட வேண்டிய விடயம் அதிக பிரெஞ்சு மக்கள் நூலும் கையுமாகத்தான் போக்குவரத்தில் நாம் அவர்களிடம் கற்க வேண்டியது பல!
ReplyDeleteஉண்மை தான். நம்மைக் கேட்டால் ‘நேரமில்லை நேரமில்லை’ என்போம். ஆனால் அதே 24 மணிநேரம் தானே அவர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் வாசிக்கிறார்களே..!
Deleteஉங்களின் புகைப்படக்காதல் விசித்திரமான பொழுது போக்கு.
ReplyDeleteஹாஹா நன்றி நன்றி.. இன்னும் நிறைய இருக்கு. போகப் போக சொல்கிறேன்.
Deleteபிரெஞ்சு அரசின் இந்த சூப்பர் ஐடியா.....புத்தகங்கள் திருடு போகாதா ஜி :)
ReplyDeleteஹாஹா புத்தக திருடர்கள் இங்கு இருக்கிறார்கள் தான். ஆனால் இந்தப் பெட்டியை அவ்வளவு லேசாகத் திறக்க முடியாது. Electronic code இருக்கு :)
Deleteலுங்கியை மீண்டும் ரசித்தேன்
ReplyDelete