Thursday, 8 June 2017

ந்தள்ளிரவு நெடுஞ்சாலை.....!

நள்ளிரவு தாண்டிய அந்த
நடுநிசிப் பொழுதில்,
நீண்ட நெடுஞ் சாலையோரம்
நீயும் நானும் நடந்தோம்..!

நெருங்காமலும்
பிரியாமலும் 
இரு தண்டவாளங்கள் போல்
நெடுந்தூரம் நடந்தோம்..!

நான் நடந்தேனா?
மிதந்தேனா?
என்று இன்னமும்
ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்..!

சாலைக்கு வலிக்காமல்
நீ நடந்த அந்த
அழகிய பொழுதில்
நட்சத்திரங்களுக்கெல்லாம்
ஒரே கொண்டாட்டம்..!

அத்தனையும் கண் சிமிட்டி
உன்னையே பார்த்தன..!
அவைகளிடம் சொல்லி வைத்தேன்
நீயும் ஒரு 'நட்சத்திரம்' என்று..!

நீ நடந்த ஒவ்வொரு அங்குல
நிலத்தையும் அரசுடமையாக்க,
பிரெஞ்சு அரசிடம்
விண்ணப்பம் வைத்துள்ளேன்..!

நள்ளிரவின்
மயான அமைதியை ஊடறுத்து,
நீ பேசிய ஒவ்வொரு சொற்களும்
கரும்பை, கற்கண்டை,
கருப்பஞ்சாற்றைத்
தோற்கடிக்கக் கண்டேன்...!

இராப் பொழுதொன்றில்
உன் குரலை அருகில் கேட்டது
அதுவே முதல்முறை...!!
பகல் பொழுதைவிட
பன் மடங்கு இனியது - உன்
இராக் குரல்....!!!

இதோ இன்று
எதேச்சையாக
அந்தப் பக்கம் போனேன்..!
சாலையோர 
பூஞ்செடிகள் எல்லாம்
உன்னை எங்கே என்று 
கேட்கின்றன..!!

அடுத்தமுறை 'அக்காவுடன்' வாருங்கள்
என்று நெடுஞ்சாலை மரங்கள் எல்லாம்
அன்புக் கட்டளை போட்டன...!!

யாரைக் கேட்டு தனியே
வந்தாய்? என
பேருந்து தரிப்பிடம்
கோபமாய் கேட்கிறது...!!

அன்பே,
ஆனதுதான் ஆகட்டும்
அவைகளின் ஆசையை
ஒரு முறை
தீர்த்து வையேன்...!!!

***    ***    ***    ***
குறிப்பு -  25.07.2016 அன்று ஃபேஸ்புக்கில் 
எழுதிய கவிதை :) 

26 comments:

  1. நல்ல கவிதை. இந்தக் கவிதை அநேகமாக காதலிக்கும் காலத்தில் எழுதப்பட்டதாய்த்தான் இருக்கவேண்டும்! அதாவது திருமணத்துக்கு முன்!!!!

    உங்களுக்கு என்று நினைத்து ஃபேஸ்புக்கில் ஒரு "நட்பு வேண்டுதல்" அனுப்பி உள்ளேன். நீங்கள்தானா என்று தெரியவில்லை!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஶ்ரீராம்... இது திருமணத்துக்கு முன் எழுதியது இல்லை :) :)

      உங்கள் நட்புக் கோரிக்கை வந்தது. ஏற்றுக் கொண்டேன். இனி பேஸ்புக்கிலும் நட்பைத் தொடர்வோம்.

      Delete
  2. ப்ரெஞ்சு அதிபர் விண்ணப்பத்தை நிராகரித்தால் அவரின் காதோரம் சென்று எனது பெயரை மட்டும் சொல்லவும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா 'கில்லர் ஜீ' பேரைக் கேட்டவுடன ச்சும்மா அதிரும்ல...!!!

      இப்போதைய அதிபர் மக்ரோன் நம்ம தோஷ்து தான். உங்ககிட்ட சொன்னா என்ன, நானும் அவரோட கட்சி உறுப்பினர் தான் :)

      Delete
  3. இப்பிடியே போனால் பிரெஞ்சு தேசம் காதலில் பிரண்ட தேசமா போயிரும்.. :)
    தயவு செய்து அந்த 'அக்காவை' இலங்கையின் தமிழ் பிரதேசங்களுக்கு கொண்டு போகாதேங்கோ ... ஏற்கெனவே நிலங்களை மீட்க நாம் படும் பாடு போதாது என்று இருக்கிறதையும் அரச உடமையாக்கிப் போடுவியள் :))

    ReplyDelete
    Replies
    1. இஞ்ச பார்ரா யார் வந்திருக்கினம் என்று..?? எங்க அந்த செங்கம்பளம்..? அச்சோ தோய்ச்சு காயப்போட்டது இன்னும் காயேல..! சரி சரி பூங்கோதை கோவிக்க மாட்டா.. :) :)

      வாங்கோ வாங்கோ..!

      பிரெஞ்சு தேசம் எற்கனவே காதலில் பிரண்டு உருண்ட தேசம் தான் :)

      அதுகிடக்கட்டும் நீங்க எப்ப உங்க ப்ளாக்க தூசு தட்டப் போறீங்க..?? :)

      Delete
    2. ஹா...ஹா... கம்பள வரவேற்பு அளவுக்கு மனதில நினைத்ததுக்கே மிக்க நன்றி.. என் பிளாக்குக்கு தூசு ஒண்டும் பிடிக்கல... நான் தான் பத்திரமா இருக்கட்டும் என்று மணலுக்குள்ள புதைச்சு வைச்சன்... இப்ப தேடி எடுத்து ஊதினன்... கண்ணுக்குள்ள மண் போயி.... கண்ணீர் நிறைஞ்சு.. கொஞ்சம் கஸ்ரம் தான் ... பார்க்கிறன்...

      Delete
    3. ச்செ, சேப்டி கண்ணாடி போடாமலா ஊதினீங்க..? :) :)

      ஒருக்கா தேம்ஸ்ல டைவ் அடிச்சீங்க எண்டா எல்லாம் சரியாகும்.. ப்ளீஸ் கோ அஹெட் :) :)

      Delete
  4. நல்ல வர்ணனை!
    "சாலைக்கு வலிக்காமல்
    நீ நடந்த அந்த
    அழகிய பொழுதில்
    நட்சத்திரங்களுக்கெல்லாம்
    ஒரே கொண்டாட்டம்..!"

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீத்தா வாங்கோ...

      முதல் முறையாக வந்திருக்கீங்க... வருக வருக...!!

      எனக்கும் பிடித்த ஒரு லைனை ஹைலைட் பண்ணி இருக்கீங்க.. மிக்க மகிழ்ச்சி :)

      அடிக்கடி வாங்க...பரிசெல்லாம் இருக்கு :)

      Delete
  5. அற்புதம் இது கவிதை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சேர்... எனக்குப் பிடித்த கவிஞர் நீங்கள். உங்களிடமிருந்து இந்த வாழ்த்து வந்திருப்பது மகிழ்ச்சி.

      நன்றி ஐயா

      Delete
  6. உங்கள் பதிவுகள் ஈ மெயிலில் எனக்கு ஏனோ வரலையே ,ரஜீவன்ஜி

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஜீ... இப்போதுதான் புதிதாக மெயில் வசதி வைத்தேன். மீண்டும் செக் பண்ணிப் பார்க்கிறேன் ஜீ

      Delete
  7. மனம் பிடித்தவர் அருகில் இருக்கையில்
    கவிதை மட்டுமா,மனமே துள்ளி வந்து
    வெளியில் விழும்தானே?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ விமலன்..!

      ஆஹா வர வர புதிய புதிய நண்பர்கள் எல்லோரும் வருகிறார்களே..! எங்க அந்த செங்கம்பளம்..??

      ஆமாம் விமலன் ஜீ, பிடித்தவர்கள் அருகில் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான்..!!

      மிக்க நன்றி ஜீ

      Delete
  8. கால் போன போக்கில் நடந்து கவிதை வடித்துள்ளீர்களே ஜி :)

    ReplyDelete
    Replies
    1. நடந்ததே ஒரு கவிதைதான் ஜீ :) :)

      Delete
  9. அருமையான கவிதை முகநூலில் படித்தது தான் . கால் போன போக்கில் கவிதை))

    ReplyDelete
    Replies
    1. ஓமோம்.. நீங்க ஏற்கனவே படித்து கொமெண்டும் போட்டிருந்தீங்க..

      Delete
  10. அக்காள் வருவாள் என்றே பூக்களும் உருகி உதிகின்றது))) வந்தாள் மகிழ்ச்சி ))) போட்டிக்கவிதை எழுத ஆசை பார்க்கலாம் பாஸ் நேரம் அமையும் போது)))

    ReplyDelete
    Replies
    1. அக்காள் வருவாள் என்றே பூக்களும் உருகி உதிகின்றது))) // உங்கட ‘கொக்காள்’ வாறா இல்லையே? நான் என்ன பண்ண பாஸ்? :) :)

      Delete
  11. கவிதைக்கு ராயல்ட்டி எல்லாம் தரமாட்டேன் சினேஹா சாங் தான் கிடைக்கும்)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா எது பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேனா...??

      Delete