Thursday 1 June 2017

ளைச் சிரிக்க வைக்ப் போகிறேன்

வளை 
அழ வைப்பது போலவே,
சிரிக்க வைப்பதும்
சுலபமானது!

“உம்” என்றால் அழுவாள்!
“உஷ்” என்றால் சிரிப்பாள்!!



அழும்போது ஒரு கோடி 
அழகு என்றால்,
சிரிக்கும் போது 
ஒன்றரைக் கோடி அழகு :) 

சிரிப்பிலே பதின்னான்காயிரம் 
வகை உண்டு என்று 
அவளைப் பார்த்துத்தான் 
தெரிந்து கொண்டேன்! 

ஒவ்வொரு வசனத்தையும்
சிரித்துக் கொண்டுதான் 
பேசுவாள்! 
தனக்கு லேசாய் 
தலை வலித்தாலும்,
சிரித்துக் கொண்டுதான் 
சொல்லுவாள்!
கசக்கும் மருந்தை 
விழுங்கும் போதும்,
புன்னகையுடனேயே 
விழுங்குவாள்!

புன்னகை,
மந்தகாசப் புன்னகை, 
மெல்லிய புன்னகை,
வல்லிய புன்னகை,
சிரிப்பு,
செண்டி மீட்டர் சிரிப்பு,
மில்லி மீட்டர் சிரிப்பு,
என அனைத்தையும்
கற்பிப்பாள் எனக்கு!

அதுமட்டுமா?
ஸ்நேகா சிரிப்பு,
சிம்ரன் சிரிப்பு,
பாவனா சிரிப்பு,
ஓவியா சிரிப்பு
என்று பல வகை 
சிரிப்புக்களை
பயிற்றுவிப்பாள்
எனக்கு!


ருநாள் 
நள்ளிரவு 12 மணிக்கு
தொலைபேசியில் அழைத்து,
“புதுவிதமாய் ஒரு 
சிரிப்பு ட்ரை பண்ணவா?”
என்றாள்!
“இல்லைன்னா விடவா
போறே?” என்றேன்!

சட்டென்று பலகை வீடுகள்
இடிந்து விழுவது போல
ஒரு ஒலி!
என்னடீ ஆச்சு என்றேன்?
அது - துர் தேவதைகளின் 
சிரிப்பாம்! 
ஏதோ ஆங்கிலப் படம்
பார்த்துக் கற்றுக் கொண்டாளாம்!

இப்படி சிரிப்பை 
உற்பத்தி செய்து
டெமோ காண்பிப்பதே
அவளின் வேலையாகிவிட்டது!
அவளது சிரிப்புக்களின் 
முதல் ரசிகன் நான் தான்!

அவள் சிரிக்கும் போது, 
இளையராஜாவின்
ஆர்மோனியம் கேட்கும்!
குன்னக் குடியின்
வயலின் பேசும்!
சிவமணியின்
ட்ரம்ஸ் ஒலிக்கும்!
அருண்மொழியின்
புல்லாங்குழல் இசைக்கும்!
ராஜேஷ்வரி சண்முகத்தின்
தேன் குரல் தெறிக்கும்!

வளைச்
சிரிக்க வைப்பது
மிகவும் சுலபம்!
உன்னோடு ஒப்பிடுகையில்
ஐஸ்வர்யா
ஏது அழகு என்பேன்!
அடக்க முடியாமல் சிரிப்பாள் 
அப்போது!

உன்னோடு ஒப்பிடுகையில் 
குயிலுக்கு ஏது குரல் வளம் 
என்பேன்!
மகிழ்ச்சியில் சிரிப்பாள் 
அவள்! 

இடியப்பம், இட்லி, 
கெட்டிச் சட்னி
எது வாங்கிக் கொடுத்தாலும் 
சிரிப்பாள்!
அவ்வளவு ஏங்க?
பல்லி முட்டாய்க்கே
பத்து நிமிஷம் சிரிப்பாள்!
கோன் ஐஸுக்கு
கோர்வையாகச் சிரிப்பாள்!

ஏனோ அந்தச் சிரிப்பு
இன்று............. :( :( :( :(

** ** ** ** ** ** **

குறிப்பு - 2013 இல் எழுதிய கவிதை இது.

ஓவியங்கள் - எனது அபிமான ஓவியர் மாருதி

10 comments:

  1. கவிதையை மிகவும் ரசித்தேன் முடிவு என்னவாயிற்று ?

    விஜய் டி.வி.யில் ஒருத்தி சிரிக்கின்றாள் கேளுங்கள் நண்பரே பிறகு வாழ்க்கையை வெறுத்தால் கம்பெனி பொருப்பல்ல!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர் ஜீ... கவிதை நல்லா இருக்கா? 4 வருடங்களுக்கு முன்னர் எழுதியது. முடிவு - எல்லாம் போய்ச்சு..!!

      விஜய் டிவியா? யாரு டிடி யா?

      Delete
  2. அடடா...!

    எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்...

    (!)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அந்தச் சிரிப்பில் தொலைவது ஒரு சுகம் சகோ டிடி :)

      Delete
  3. கவிதை அழகாய்ச்சிரிப்பு பற்றி சிந்திக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்கவும் வேறு வைத்ததா? :) மொக்கை கவிதை என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன் :) :)

      Delete
  4. கவிதை பழசு என்றாலும் இன்னும் காலத்துக்கு பொருத்தமாக இருக்கு))) சினேஹா போல சிரிப்புத்தானே வாழ்க்கையும்)))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சரியா சொன்னீங்க... சிரிப்பும் மகிழ்ச்சியும் தான் வாழ்க்கை..!!

      Delete
  5. தமிழ்மணம் என்னாச்சு பாஸ் ?உங்களையும் என்னைப்போலவே காத்து இருப்போர் பட்டியலில் சேர்த்துவிட்டதோ?

    ReplyDelete
    Replies
    1. அதேதான் பாஸ்...! 48 மணிநேரத்தினுள் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். நாலைந்து 48 மணிநேரம் போய்விட்டது. பார்ப்போம் :)

      Delete