Friday, 2 June 2017

திவர்களுக்குப் பரிசு - ஓடிவாங்கோ ஓடிவாங்கோ 

ணக்கம் நண்பர்களே, அன்பர்களே :)

இது என்னுடைய 16 வது பதிவு. கடந்த பதினைந்து பதிவுகளில் எனக்கு ஆதரவும் அன்பும் வழங்கிய நண்பர்களுக்கு பரிசு கொடுக்கலாமே என்று ஒரு சின்ன ஆசை. முதல்முறையாகப் பரிசு கொடுப்பதால், மங்களகரமாக இருக்கட்டுமே என்று பூக்களைப் பரிசாகத் தருகிறேன் :) :)



01, பகவான் ஜீ 

என்னுடைய இந்த ‘ஆகவே’ தளத்தில் முதல்முறையாக கமெண்ட் எழுதியவர் அண்ணன் பகவான் ஜீ. அவர் ஒரு நகைச்சுவை மன்னன். எப்படித்தான் இடைவிடாம, டெயிலி ஜோக்ஸ் எழுதுறார் என்று தெரியவில்லை  :) :). பகவான் ஜீ இன் அன்புக்குத் தலைவணங்கி, இந்த அழகிய பூவை அவருக்கு வழங்குகிறேன்.

( இது நேற்று எடுத்த படம் ஜீ  )


02, கில்லர் ஜீ 

அண்ணன் கில்லர் ஜீயும் அடிக்கடி கமெண்ட் பண்ணி, அன்பையும் ஆதரவையும் தருவார். அவருடைய பதிவுகளில் ஆணித்தரமும் சமூக அக்கறையும் நிரம்பி இருக்கும். அண்ணன் கடவுளையே கேள்வி கேட்டவர் :) :) அந்த  கம்பீரமான மீசை அண்ணனுக்கு மேலும் அழகு :) :)

அண்ணனுக்காக இந்த சிவப்பு ரோஜா.


03, தனிமரம் நேசன்.

இங்கு பரிசில் தான் இருக்கிறார். நீண்டகால நண்பர். சூதுவாது தெரியாத ஒரு அப்பாவி. சண்டை வந்தாலும் அடுத்த நிமிஷம் எல்லாத்தையும் மறந்து அன்பாக பேசுவார். இவருக்கு ஒரு பிரெஞ்சுக் காதலி உண்டு. மற்றப்பக்கம் சினேகா மீதும் அண்ணனுக்கு ஒரு கண்ணு :) :) :)

ஒருமுறை வந்தார் என்றால், மூன்று நான்கு பதிவுகளுக்கு சேர்த்து கமெண்ட் போடுவார்.

நேசனாருக்கு இந்த வெள்ளை ரோஜா -

(  நேசன் அண்ணை, இது நுவாசி லு குரோன் பகுதியில் எடுத்த படம். அந்தப் பக்கம் போயிருக்கிறீங்களா? )


04, திண்டுக்கல் தனபாலன் என்கிற டிடி

இவருடைய முக அழகைப் பற்றி நானும் நண்பர்களும் பேசுவதுண்டு. நல்ல மங்களகரமான முகம். நிறைய பதிவர்களுக்கு கமெண்ட் போடுவார். அதிகம் எழுதமாட்டார். ஒருவரியோ இரண்டு வரியோ எழுதி, எல்லோரையும் ஊக்குவிப்பார். டெக்னோலொஜி மன்னன். எல்லோருக்கும் ஓடி ஓடி உதவுவார்.

இவருடைய கமெண்டுகளும் என்னுடைய பதிவுகளுக்கு வருவது மகிழ்ச்சி.

சகோ டிடிக்கு இந்த சிவப்பு மஞ்சள் பூக்கள் பரிசு.



05, ரமணி அண்ணன்.

மூத்த பதிவர். கவிதை மன்னன். ஒவ்வொரு கவிதையும் அர்த்தம் நிரம்பி வழியும். நாம் சிந்திக்காத பல வித்தியாசமான கோணங்களில் எல்லாம் சிந்திப்பார். அதை நறுக்காகவும் சுருக் என்றும் கவிதையாக வடிப்பார். அண்ணனின் அன்புக்காக இந்த ரோஜா பரிசு.



06, எல்லா பதிவர்களுக்குமானது...!

மேலே என்னுடைய பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போடும் நண்பர்களுக்குத் தனித்தனியே பரிசு கொடுத்துள்ளேன். இனி வருவது பொதுப் பரிசு. அதாவது என்னுடைய பதிவுகளைப் படிப்போருக்கானது. படிக்கும் எல்லோருமே கொமெண்ட் பண்ண மாட்டார்கள் அல்லவா? அப்படியான நண்பர்களின் அன்புக்காக இந்த மஞ்சள் பூக்கள் பரிசு.


பதிவர்களின் ப்ளாக்குக்கு சென்று கமெண்ட் போடுவது அவர்களுடைய வீட்டுக்குப் போவது போன்றது. எனக்கு சில ப்ளாக்குகளுக்குச் செல்ல தயக்கமாக இருக்கும் :) :)  அழையா வீட்டுக்குப் போவது சரியா? என்கிற குழப்பம் இருக்கும். ( வாசிப்பேன். ஆனால் கமெண்ட் போடுவதில்லை ).

ஆனால்  நான் எல்லோரையும் அன்பாக
வருக வருக என்று வரவேற்கிறேன் :) :) :)

வாங்க பழகலாம்...!!


22 comments:

  1. வணக்கம் நண்பரே...
    எனக்கான பரிசை மனப்பூர்வமாய் ஏற்று அதை எடுத்து "முக்கியமான" ஆளுக்கு கொடுக்க நினைத்தேன் ஆனால் கணினியை விட்டு வரமறுக்கிறது (ஆகவே) கணினியோடு தூக்கி கொடுத்து விட்டேன் உங்களால் இனி புதிய கணினி வாங்க கில்லர்ஜி

    மகிழ்ச்சி - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜீ... பரிசை ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி ஜீ :)

      முக்கியமான ஆளா? யார் ஜீ அது? ( கடவுளா இருக்குமோ? :) )

      Delete
  2. மிகவும் நன்றி...

    // அழையா வீட்டுக்குப் போவது சரியா? // இப்படி நினைக்காதீர்கள்... பிடித்த பதிவு எதுவென்றாலும் உங்களின் கருத்துரை அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தரும்... அதனால் கருத்துரையில் கர்ணனாக இருக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நான் எழுத நினைத்து விட்டுப்போனதை நண்பர் D.D அவர்கள் சொல்லி விட்டார்
      முதலில் போர் தொடுங்கள் பிறகு அம்(ன்)புகள் உம்மையும் நோக்கி வரும்...

      Delete
    2. வாங்கோ டிடி... சொல்லிட்டீங்க இல்ல..! இனிப் பாருங்க :)

      Delete
    3. போர் தொடுத்தால் அம்புகள் வரத்தான் செய்யும் இல்லையா கில்லர் ஜீ?

      இதோ இப்பவே புறப்பட்டுட்டேன் :)

      Delete
  3. ஆகா ,முதல் பூவே எனக்குதானா :)
    நேற்று பறித்த பூ என்றாலும் அதில் உங்கள் அன்பின் வாசம் அப்படியே இருக்கிறது றஜீவன் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ.. ஆமா உங்களுக்கேதான் :) :)

      அன்பின் வாசத்தைப் புரிஞ்சு கொண்டீங்க ஜீ.. ரொம்ப சந்தோஷம்.

      Delete
  4. ஆஹா அழகான வெள்ளைப்பூ அன்பின் பரிசு கண்டு மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைப்பூ பிடித்துவிட்டது போல :)

      Delete
  5. இந்தப்பூவைப்பறித்து சினேஹா தலையில்ச்சூட்டி பூவே முதல் பூவே என்று டூயட் பாட ஆசை ஆனாலும் காலம் இதுவல்ல))) காத்திருக்கின்றேன் தனிமரமாக)))

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு காலம் காத்திருப்பீங்க பாஸ்? பேசாம சிநேகாவ கடத்துவோமா?

      Delete
  6. பரிசில் பல இடங்களுக்கு போக சந்தர்ப்பம் அமையவில்லை .சோம்பல்/ஆன்மீகம்/அடுப்படி என பல தடைகள்)))நுவாசிக்கிரோனில் நண்பர் இருக்கின்றார் பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. என்ன பாஸ், இப்பதானே உங்களுக்கு 18 வயசு. அதுக்கிடேல ஆன்மீகமா..?

      Delete
  7. பதிவு பிடித்தால் அழையாத வீடு என்றாலும் ஒரு காப்பியோ /தண்ணியோ குடித்து எழுத்துப்பயிருக்கு நீர்வார்ப்போம்! வளரும் வளர்ச்சிக்கு துணையாய் இருப்போம் இதுதான் என் சிந்தனை)))

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் நானும் நினைக்கிறன். யாராவது வீட்டுப்பக்கம் வராதே என்று அடித்து விரட்டினால் நீங்கதான் பொறுப்பு :) :)

      Delete
  8. நுவாசிக் குரோனில் கூட அழகான நதி ஓடுகின்றது ))) அமைதியான எரியா!

    ReplyDelete
    Replies
    1. ஓம்.. சென் நதியின் ஒரு பிரிவாகிய 'மார்ன்' நதி அங்கு ஓடுது. அழகோ அழகு..!!

      Delete
  9. இன்னும் பல பதிவுகள் தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி
    பதிவுலக ஜாம்பவான்களுடன்
    என்னையும் இணைத்து பரிசு
    கொடுத்திருப்பது மிக்க மகிழ்வளிக்கிறது
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ஒரு ஜாம்பவான் தான் ரமணி சேர் :)

      Delete