ஃபேஸ்புக்கில் முன்பு ஒருநாள் எழுதிய Funny கவிதை. அடிக்கடி வாசித்து நானே சிரிப்பேன். இதோ இன்று உங்களிடம் தந்துவிடுகிறேன்.
நீங்க படிச்சே ஆகணும் :) :)
விதி யாரை விட்டது? :) :)
உலக மகா கோபக்காரர்களே
எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்..!
'கோபம் கொள்வது எப்படி?' என்று
கற்றுக் கொடுங்கள்..!
யாரங்கே...?
ஓ முருகப் பெருமானா?
ஏதோ மாம்பழப் பிரச்சனையில்
கோவித்துக்கொண்டு
ஓடினீர்களாமே?
உங்கள் கோபத்தின்
ஒரு பாதியை எனக்கு
கடனாக கொடுங்களேன்..!
மார்பு திருகியெறிந்து
மதுரையை எரித்த
கோபக்கார கண்ணகியே..!
என் மீது கொஞ்சம்
கருணை காட்டலாமே..!
கோபப்பட வேண்டும் நான்..!
அதற்கு ஒரு
வழி சொல்லுங்களேன்...!!
ஐயா... 'ரெபிடெக்ஸ்' காரர்களே..!
'முப்பது நாளில் ஆங்கிலம்' என்கிறீர்கள்..!
'முப்பது நாளில் இந்தி' என்கிறீர்கள்..!
'முப்பது நாளில் கோபப்பட' ஏதும்
புத்தகம் உண்டா?
அவ்வைக் கிழவியே..!
அறிவிருக்கா உனக்கு?
'ஆறுவது சினம்' என்றாயே..!
என் கோபத்தைக் குழிதோண்டிப்
புதைத்ததில் உனக்கும்
அல்லவா பங்குண்டு...!!
'வெகுளாமை' எனும்
அதிகாரம் வைத்து,
குறள் படைத்த வள்ளுவரே
வெறுக்கிறேன் உம்மை..!
'சினம்' என்பது
'சேர்ந்தாரைக் கொல்லி'
என்று அறிக்கை விட்டீர்..!
உமக்கு நான்படும்
அவஸ்தை புரியுமா?
'கோபம்' கூடாது
என்று போதித்த
எல்லா பெருமக்களும்
நன்கு கேளுங்கள்...!
எனக்கு இப்பவே
கோபம் வேண்டும்...!!
எவ்வளவுதான் முயன்றாலும்
என்னவளின் அருகே
கோபமே வருகுதில்லை..!!
அவளின் செல்லக் குரல்
கேட்டதும் வந்த கோபமெல்லாம்
காற்றிலே பறக்கிறது..!
முன்னூறு தடவை
அழைத்தாலும் பதில் பேசாமல்
'உம்' என்று இருக்கிறாள்..!!
'முடியுமான' விஷயத்தைக் கூட
'முடியாதென்று' மறுக்கிறாள்..!
கண்டவன் நிண்டவனை எல்லாம்
'ஹாண்ட்சம்' என்கிறாள்..!
விளையாட்டு விளையாட்டாய்
வெறுப்பேற்றுகிறாள்..! :)
கோபப்பட வேண்டும் நான்..!!
முப்பது நாட்கள்...
இல்லை இல்லை..
மூன்று நாட்களேனும் அவளுடன்
பேசாதிருக்க வேண்டும்..!
கஷ்டப்பட்டு சேர்த்த
கோபமெல்லாம் அவளைக்
கண்ட நொடியிலே
மாயமாய் போவதென்ன?
'கோழி' விற்க கடைகள் உண்டு..!
'கோபம்' விற்க கடைகள் உண்டா??
அற்புதமான கவிதை
ReplyDeleteஆனால் இந்த காரணத்திற்காகவெனில்
கோபம் கிடைப்பது கஸ்டம்தான்
என்ன விலை கொடுத்தாலும்...
வாங்கோ ரமணி ஐயா... அப்ப கோபம் கிடைக்காதா? :)
Deleteஅதுசரி, மலர்க்கணைகள் பாய்ந்து விளையாடும் இடத்தில் கோபத்துக்கு ஏது வேலை..??
அதே காதலியை மணமுடித்து பாருங்களேன் அடுத்த முப்பது நாட்களில் விடை கிடைக்கலாம்.
ReplyDeleteஹாஹா கில்லர்ஜி, அடிச்சீங்க பாருங்க சிக்ஸர். கலியாணத்துக்கு அப்புறம் எல்லாம் தலைகீழ் இல்ல?
Deleteசிரிக்க வைத்தது. ரசிக்கவும் வைத்தது. ஆமாம், இதென்ன பதிவு இடது ஓரம் ஒதுங்கி ஒரு ஓரமாய்க் காட்சி அளிப்பது எனக்கு மட்டும்தானா?
ReplyDeleteரசிக்க வைத்ததா..? சரி சரி இனி இதே ரூட்டில் 4 கவிதை எழுதிவிட வேண்டியதுதான் :) :)
Deleteபின்னூட்டம் தந்ததும் சரியாகி விட்டது! என் கணினி கோளாறு போலும்!
ReplyDeleteஶ்ரீராம் பின்னூட்டம் போடலைங்க வருத்தத்தில அப்படி இருந்திருக்கும். பின்னூட்டம் போட்டதும் சரியாகிட்டுது :) :)
Deleteமேலே மேலே போய்...தரையில் குப்புற விழுகிறான் காதலன், ‘எவ்வளவுதான் முயன்றாலும்
ReplyDeleteஎன்னவளின் அருகே
கோபமே வருகுதில்லை..!!’ என்று சொல்லும்போது!
அற்புதமான ‘சஸ்பென்ஸ்!
//'கோழி' விற்க கடைகள் உண்டு..!
'கோபம்' விற்க கடைகள் உண்டா??// -மனதில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்ட வரிகள்!
மனம் திறந்த பாராட்டுகள் றஜீவன்.
வாங்கோ பசி ஐயா... உங்கள் வருகைக்கு முதலில் நன்றிகள். உங்கள் வாழ்த்தினால் மகிழ்ந்தேன்.
Deleteஆமா உங்களுக்கு அக்காலத்தில் கோபம் வந்திச்சா? :)
நல்ல கேள்வி ரஜீவன்.
Deleteஅந்தக் காலத்தில் அடிக்கடி வரும். ஏன்னா, அப்போ என் கோபத்துக்கு ஆளானவங்க எல்லாம் பயந்து நடுங்கினாங்க. இப்போ...
கோபமே வர்றதில்ல. காரணம் உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!!
ரஜீவன் > றஜீவன்.
Deleteஹாஹா காரணம் புரிந்தது ஐயா :) :)
Deleteஎன்னை 'றஜீவன்' என்று அழைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா :)
அருமையான வரிகள்
ReplyDeleteமிக்க நன்றி அசோகன் ஜீ :)
Deleteஇப்போ கோபம் வராது ,கல்யாணம் ஆனபின் கோபத்தை தவிர வேறு எதுவும் வராது ஜி :)
ReplyDeleteஹா ஹா செம பஞ் ஜீ :) சிரிச்சு முடியல
Deleteகவிதை அருமை முன்னர் முகநூலில் ரசித்தவைதான்)))
ReplyDeleteஓமோம்... அங்கும் கொமெண்ட் போட்டிருந்தீங்க என?
Deleteஇன்று சம்மந்தரிடமும் /சுமந்திரனிடமும் கேட்டுப்பாருங்க கோபம் கொப்பளிக்கும் முதல்வர் விடயத்தில்)) கோர்த்துவிடுவோம் காதலிக்கும் அரசியலுக்கும்))
ReplyDeleteஹாஹா சம்மந்தனைப் பார்த்தால் எனக்கே கோபம் கோபமா வரும் :)
Deleteநாமல் ராஜபக்ஷவிடம் கேட்போம் ஏன் சார் அசின் நம்நாடு மருமகள் ஆகாமல் போனார் என்று வரும் கோபத்தை தணிக்கை செய்யமுடியாது வார்த்தையில்)))
ReplyDelete'அசினா? அது யாரு?' என்றல்லவா நாமல் கேப்பாரு..!
Deleteகோபம் வருவதைப்பற்றி பிரபல்ய கிரிக்கட் விளையாட்டு வீரர் மற்றும் ஜனசக்தி காப்புறுதி தூதுவர் முத்தையா முரளிதரனிடம் கேட்போம் ஏன் அவுஸ்ரேலியா நாட்டுக்கு பயிற்ச்சிவிப்பாளராக போனீங்க என்று இப்படியே தூக்கி அடிப்பார் சிக்சரில் கோபம் பற்றி இதை எல்லாம் காதலியுடன் சொல்லி கோபத்தை வரவைப்போம்))
ReplyDeleteகோபப்பட உங்களிடம் ஏகப்பட்ட ஐடியாக்கள் இருக்கும் போல :)
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோ முரளிதரன் :)
Deleteமிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள்.. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
ReplyDelete