Sunday 11 June 2017

வுள் பிரிதில்லை....!

பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது என்கிறது ஒரு சினிமாப் பாடல். அது உண்மை என்றுதான் நானும் நம்புகிறேன் - உண்மையான பாசமாக இருந்தால்....!!



ஒருவரோடு பழகுகிறோம். நடுவில் பிரச்சனை வருகிறது. சண்டை போடுகிறோம். கடைசியில் பிரிந்துவிடுகிறோம். அட, அவ்வளவுதானா வாழ்க்கை..? பிரிவுக்குப் பின்னர் ஒரு வாழ்க்கை இல்லையா..? பிரிந்தவர்கள் மீண்டும் சேருவதில்லையா..?

சினிமாப் படங்களில் உறவுகள் பிரிவுவது போலக் காட்டினாலும், கடைசியில் ஒன்று சேருவது போலவே காட்டி படத்தை முடிப்பார்கள். கணவன் - மனைவி , தந்தை - மகன், அண்ணன் - தங்கை இப்படி எத்தனையோ உறவுகள் முதலில், புரிந்துணர்வு இல்லாமல் பிரிந்து போவதும், பின்னர் ஒருவரை ஒருவர் உணர்ந்து ஒன்று சேருவதுமாகத்தான் அத்தனை படங்களும் எடுக்கப்படுகின்றன.

காரணம் என்ன..? 

உண்மையான உறவாக இருந்தால், உண்மையான பாசம் நெஞ்சில் இருந்தால் யாராலும் யாரையும் பிரியவே முடியாது. வெள்ளைக்காரர்கள் கூட தமக்குள் ஒத்துவரவில்லை என்று பிரிவார்கள். ஆனால் ஒருவரோடு ஒருவர் கோபத்தோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் நண்பர்கள் போல பழகுவார்கள். தேவைப்பட்டால் மீண்டும் இணைந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.

ஒருவரோடு நாம் வாழும் காலத்தில் அவரைப் புரிந்து கொள்வதை விட, அவரைப் பிரியும் காலத்தில் தான் அவரை கூடுதலாகப் புரிந்து கொள்கிறோம். ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும். உறவின் அருமை பிரிவில் தெரியும்’ என்று சும்மாவா சொன்னார்கள்?

ஒருவரைப் பிரிந்திருக்கும் காலத்தில், நாம் அவரோடு பழகிய நாட்களை ஒன்றுக்கு ஆயிரம் முறை மீட்டிப் பார்க்கிறோம். ‘ச்சே, நான் இப்படிச் செய்திருக்கக் கூடாது. அப்படிச் செய்திருக்கக் கூடாடது’ ‘இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம்’ ‘இன்னும் கொஞ்சம் அனுசரித்துப் போயிருக்கலாம்’ என்று நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்கிறோம்.

இன்னொருமுறை சேர்ந்து வாழும் வாய்ப்பு வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? என்கிற எண்ணம் அப்போதுதான் மனதில் உதயமாகும். இன்னொரு முறை சேர மாட்டோமா? என்கிற ஏக்கமும் அப்போதுதான் உருவாகிறது. இதைத் தான் பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே என்று ஒரு சினிமாப் பாடல் சொல்கிறது.

ஒருவரை ஒருவர் பிரிந்து செல்கிறபோது, அந்த நொடியே அந்த இருவரும் ஒருவரை ஒருவர் மறந்துவிட்டால், அவர்கள் மத்தியில் உண்மையான பாசம் இருந்திருக்கவில்லை என்று அர்த்தம். மாறாக ஒருவரைப் பிரிந்த பிறகு நாம் அவரைப் பற்றி அதிகமாக எண்ணி, கவலைப்பட்டு, அவரின் நினைவாகவே இருப்போமானால், நம் மனதில் அவரை ஆழப் பதித்து விட்டோம் என்று அர்த்தம்..!

என்னைப் பொறுத்தவரை  பிரிவுக்குப் பின்னர் மீண்டும் துளிர்க்கும் உறவுதான், உறுதி மிக்கதாகவும் உண்மையானதாகவும் இருக்கும். இப்பதிவின் முதல் வரியை  மீண்டும் படியுங்கள்.

’பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது’ 

**************************************

பின் இணைப்பு - உறவுகளே, இப்பதிவினைக் கருவாகக் கொண்டு, மூத்த பதிவர், அன்புக்குரிய ரமணி ஐயா அவர்கள், தனது தளத்திலே கவிதை ஒன்றை வடித்துள்ளார்.  இங்கே  செய்து கவிதையைப் படிக்கலாம். நன்றி

22 comments:

  1. உண்மைதான்! உண்மையான பாசம் நினைத்து நினைத்து ஏங்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீத்தா,

      உண்மையான பாசம் ஒருபோதுமே விட்டு விலகாது / விலகவும் நினைக்காது. நன்றி உங்கள் கருத்துக்கு..!!

      Delete
  2. சிலபேர்களை விட்டு நாம் பிரிவது அல்லது விலகி நிற்பது நம் நிம்மதிக்காகவே என்பது போல சம்பவங்கள் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பிரிவதில் தவறில்லை. அன்பு என்பது எதிர்பார்ப்பில்லாதமல் இருந்தால் நிம்மதி - இரு பக்கமும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம்,

      அது உண்மைதான். பிரிந்த பின்னர் இருவருடைய மனதிலும் எதுவுமே இல்லை என்றால் அவர்கள் உண்மையாகவே பாசம் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

      ஆனால் பிரிந்த பிறகும் நினைவுகள் வாட்டினால், அன்பும் பாசமும் எங்கோ அடிமனதில் இருக்கு என்றுதானே அர்த்தம்..??

      Delete
  3. முதல்முறை வந்தபோது ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் இல்லை. எனவே உங்களது தளத்தை 'எங்கள் ப்ளாக் சைட் பாரில் இணைத்து விட்டேன்! இப்போது சப்ஸ்க்ரைபும் செய்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. நானும் பார்த்தேன் ஸ்ரீ, அங்கே ‘எங்கள் ப்ளாக்கில்’ என் ப்ளாக்கும் இணைக்கப்பட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும்..!!

      Delete
  4. நல்ல கருத்து கணவன்-மனைவி தவிர்த்து...

    சில உறவுகள் கள்ளத்தனமாகவே இருக்கின்றது பிரிந்தும் உணராதவர்களை என்ன செய்யும் பாதிக்கப்பட்ட நல்ல மனம் ?

    ReplyDelete
    Replies
    1. பிரிந்தும் உணராதவர்களை என்ன செய்யும் பாதிக்கப்பட்ட நல்ல மனம் ? // காலம் முழுவதும் கவலையோடு வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான்..!

      Delete
  5. "பிரிவுக்குப் பின்னர் மீண்டும் துளிர்க்கும் உறவுதான்" - சாதாரணமாகப் பிரிந்தால் இது சரி. கடுமையான கருத்துவேறுபாடுகளுக்கு இடையில் பிரிந்தால், சண்டை உக்கிரமாக இருந்தால் - 'உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது' என்பதுபோல் ஆகிவிடும். பொதுவா கணவன் மனைவிக்கிடையில், கருத்து வேறுபாடு இருக்கலாம், பிரிவு கூடாது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத் தமிழன். முதல் முறையாக வந்திருக்கும் உங்களை வருக வருக என அன்போடு வரவேற்கிறேன்.

      எனக்கு ஏனோ இந்த உடைந்த கண்ணாடி உவமையில் நம்பிக்கை இல்லை சகோ. மனம் நிறைய உண்மையான பாசம் இருந்தால், முன்பு நடந்த சண்டைகள், வாக்கு வாதங்கள், வார்த்தைப் பரிமாற்றங்கள் எல்லாமே மறந்து போகும்.

      அதுபோக, ஒருவர் நம்மைப் பார்த்துச் சொன்ன தீய வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கும் நாம், அவர் சொன்ன நல்ல வார்த்தைகளையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

      ஆயிரம் முறை நல்லவிதமாகப் பேசிய ஒருவர், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தீய வார்த்தைகள் சொன்னால், அந்த சந்தர்ப்பம் எது என்று நாம் ஆராய வேண்டும். அந்த வார்த்தைகளைச் சொன்ன பின்னர் அவர் நிறையவே வருந்தியிருக்கலாம். அதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

      எல்லாவற்றும் மனம் தான் காரணம் சகோ.

      ‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்’

      - ஐயோ நான்பாட்டுக்கு நிறைய எழுதித் தள்ளிவிட்டேன் நெல்லைத் தமிழன் சகோ. தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

      - அப்புறம் உங்கள் பெயரில் இருக்கும் நெல்லை என்பது - திருநெல்வேலி மாவட்டமா? அல்லது வேறேதும் ஊரா? அறிய ஆவல் சகோ :) :)

      Delete
    2. 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' - மனசு பெரும்பாலும், நல்லவற்றை மறந்துவிடும். மறக்காமல் இருப்பது பிறர் செய்த கெடுதல்கள்தான். என்ன செய்வது...

      அந்த ஊரைவிட்டு வந்து பல காலமாச்சு (30+ வருஷம்). ஆனாலும் நான் திருனெவேலி என்று சொல்வதில் மகிழ்ச்சி. கொஞ்சம் படித்ததும் பாளையங்கோட்டைலதான்.

      Delete
    3. வாங்கோ சகோ நெல்லை... மீண்டும் வந்து பதில் தந்தமைக்கு நன்றி.! நெல்லையில் அல்வா அல்லவா பேமஸ்?

      பாளையங்கோட்டை என்றதும் எனக்கு அந்த வடிவேலும் காமெடிதான் நினைக்கு வரும்... ‘பாளையங்கோட்டை ஜெயில்லதான்யா படிச்சது. வேலூர் ஜெயில வெள்ளையடிச்சு வாடகைக்கு விட்டிருக்கோம்’ என்பார்.. ஹா ஹா

      எப்போது பார்த்தாலும் சிரிப்புத்தான்..!!

      Delete
  6. Replies
    1. வாங்கோ சகோ டிடி... மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்..!

      Delete
  7. மிக மிக அருமையாகச் சொன்னீர்கள்
    தொடரும் உறவுகளை விட
    தொலைத்த உறவுகள்தான் அதிகம்'மனதில்
    நிற்கின்றன
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா... என் பதிவின் உட்பொருளை நீங்கள் இரண்டு வரியில் எழுதிவிட்டீர்கள். மிக்க நன்றி

      Delete
  8. தங்கள் கருத்தைக் கருவாகக் கொண்டு
    ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்
    நேரமிருப்பின் தங்கள் கருத்தினைப்
    பின்னூட்டமாகச் சொல்லவும்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா... பார்த்தேன்.. பரவசமானேன் :)

      Delete
  9. பிரிந்த பின் சேரும் உறவு நட்புக்கள் என்றும் நீடித்தே பயணிக்கும் வாழ்க்கையில்.

    ReplyDelete
  10. பிரிந்த உறவுகள் ஓட்டுவதே இல்லை ஜி :)

    ReplyDelete
    Replies
    1. விதிவிலக்காக கூட ஒட்டாதா ஜீ :) :(

      Delete