இந்தக் கதையைக் கேட்டீர்கள் என்றால் சிரிப்பீர்கள். எனக்கு இப்ப எல்லா சினிமா பாட்டுக்களும் போரடித்து விட்டது :) :)
இளையராஜா பாட்டு, ரஹ்மான் பாட்டு என்று இன்றைய அனிருத் வரை எல்லோருடைய பாடல்களையும் கேட்டுக் கேட்டு அலுத்தே விட்டது. பாடல்களை அதிகமாகக் கேட்பதால், கிட்டத்தட்ட சகல சினிமாப் பாடல்களையுமே கேட்டுவிட்டேன் என்று சொல்லலாம்.
இப்போது என்ன செய்வது? எந்தப் பாடலை ரசிப்பது என்று குழம்பியபோதுதான், ஓடிவந்து கை கொடுத்தவர் தியாகராஜ பாகவதர். இப்போது என்னுடைய போனில் நிறைந்து போயிருப்பது அந்தக் கால பாகவதர் பாடல்களே..!
எனக்கு என்னாச்சு? ஏதும் பில்லி சூன்யம் தாக்கிடுச்சா? என்று என்னை நானே கிள்ளிப் பார்ப்பதுண்டு :) :) என்றாலும் இசையை ரசிக்க ஏது வயது?
MKT யின் சகல பாடல்களும் ‘உயர் குவாலிட்டியில்’ என்னிடம் உண்டு. அதில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த ‘மன்மத லீலை’
என்ன ஒரு பாட்டு? என்ன ஒரு கொம்போசிசன்? அவர் கட்டிலில் படுத்துக் கிடந்து பாடும் அழகென்ன? அதுக்கு டி ஆர் ராஜகுமாரி ஆடும் அழகென்ன? வாவ்வ்வ்வ்வ்வ்...!
டி ஆர் ராஜகுமாரியின் அழகு பற்றி சொல்லியே ஆகவேண்டும். ‘ரம்பா’ என்று எம்கேடி சொல்லும்போது, பதிலுக்கு ‘சுவாமி’ என்று அழைத்துவிட்டு ஒரு பார்வை பார்ப்பார்.
அந்தப் பார்வையில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்தக் கண் என்ன? கன்னங்கள் என்ன? அடடா....!! :) :) :)
இதனால் தானோ என்னவோ இந்தப் பாடல் இவ்வளவு புகழ்பெற்று இன்றளவும் நின்று பிடிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த சாருகேசி இராகத்தில், இசையமைப்பாளர் ஜீ.இராமநாதன் அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்.
இன்றுவரை எத்தனை தடவைகள் கேட்டேன் என்றே நினைவில்லை. பாடல் காட்சியில் ஃப்ளையிங் கிஸ் கூட கொடுக்கிறார்கள் :) :)
( அதுவும் 1943 ம் ஆண்டு ).
இந்தப் பாடலில் ஒரு வரி வரும் ‘என்னுடனே நீ பேசினால்
வாய் முத்து உதிர்ந்து விழுமோ?’ என்று :) :)
வாயில் இருந்து முத்து உதிருமோ? என்று ஊரிலே சின்ன வயதிலே ஆட்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மா உறுக்கும் போது நாம் வாயை மூடிக்கொண்டு நின்றால், ‘வாயைத் திறந்து பதில் சொல்லு. என்ன முத்து கொட்டிண்டுமோ?’ என்று அம்மா உறுக்குவா..!
இப்பதான் தெரியுது.. இந்தப் பாட்டில இருந்து சுட்டதுதான் அந்த வரி என்று..! :) :)
’றஜீவன், உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?’ என்று யாராவது கேட்டால், இனிமேல் எனது பதில் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’ :) :)
இந்த இனிய பாடலை ரசிக்க - வாய் முத்து உதிர்ந்து விழுமோ? :) :)
குறிப்பு : இந்தப் பாடல் உயர் குவாலிட்டியில் என்னிடம் இருக்கு என்று சொன்னேன் அல்லவா? rjvn2208@gmail.com என்ற முகவரிக்கு வந்தால் உங்களுக்கும் பாடல் தருவேன் :) :) - ஒரு பொதுச் சேவைதான்.
அன்றைய சில்க்...!
ReplyDeleteஆனாலும் உங்கள் சேவை பிடிச்சிருக்கு...!
நன்றி சகோ டிடி... அவரின் குரலும் மிக இனிமை..!!
Deleteஎனக்கும் பிடித்த அருமையான பாடல்
ReplyDeleteவீட்டில் பாகவதரின் பாடல் கேஸட்
எப்போதும் உண்டு
இந்தப் பதிவு எழுத முடியாத
என் பால்ய நினைவுகள் சிலவற்றை
நினைக்கச் செய்தது
வாழ்த்துக்களுடன்...
அடடா... உங்களை அக்காலத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டேனா..?? மிக்க மகிழ்ச்சி.
Deleteஎனக்கும் பாகவதர் பாட்டுக்கள் ரொம்பவே பிடித்துவிட்டன. 'அன்னையும் தந்தையும் தானே பாரில் அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்' பாடலும் மிகவும் பிடிக்கும்.
அருமையான பாட்டு இலங்கை வானொலியில் இந்தப்பாட்டு சீடி தேயத்தேய ஒலிபரப்பிய பல அறிவிப்பாளர்கள் பட்டியல் இருக்கு ராஜகுமாரி கண்கள் போல)))
ReplyDeleteஹா ஹா சரியா சொன்னீங்க பாஸ்..! இலங்கை வானொலியில் காலை 5.15 க்கு பக்திப் பாடல்கள் முடிந்தவுடன் பழைய பாடல்கள் போடுவார்கள்.
Deleteஅதைக் கேட்பதில் அத்தனை இன்பம்.
இப்ப எல்லாம் தமிழ்மணம் பலரை தள்ளிவைத்துவிட்டது போல))) அதனால் நீங்கள் சைட்பாரில் மின்னஞ்சல் மூலம் பதிவை பெறும் வசதியை செய்தால் மகிழ்ச்சு உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் என் போன்ற சாமானிய வாசகர்கள் இதன் மூலம் தான் அதிகம் நன்மை அடைகின்றோம் தற்காலிகமாக தமிழ்மணம் திருந்தும் வரை)))
ReplyDeleteதமிழ்மணத்தில் விண்ணப்பித்துள்ளேன். அவர்கள் எப்போது இணைப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் சொன்னது போல மின்னஞ்சல் பார் வைக்கிறேன்.
Deleteகொஞ்சம் உங்களின் தொழில்நுட்ப அறிவை விரிவு படுத்துங்க பாஸ்))) சுட்டுப்போட்டாலும் தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் தனிமரம் எப்போதும் கைபேசியில் தான் பதிவை அதிகம் படிக்கின்றேன் கணனியில் இருந்து கும்மி மட்டும்தான் முகத்தில்))) அப்புறம் அருமையான பாடல் என்னிடம் இருக்கு அதை எப்படி யூட்டிப்பில் தமிழில் பகிரமுடியும் என்பதை சொல்லுங்க)) அது தெலுங்கு படப்பாடல்)))
ReplyDeleteபாடலை யூடியூப்பில் பகிர்வது மிகவும் இலகுவானது. வேண்டுமானால் தனிப்பதிவு போடவா பாஸ் ? :)
Deleteதொடர்ந்தும் முத்துக்கள் பத்து போல முத்துப்பேசட்டும் வாய் ஊடாக)))
ReplyDeleteஹாஹா உங்கள் வாக்கு பலிக்கட்டும் :)
Deleteபாகவதரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் உன்னையே அன்புடன், சிவபெருமான் கிருபை வேண்டும், அன்னையும் தந்தையும்தானே, ஜகத்ஜனனி, போன்றவை. இந்தப் பாடல் என்ன ராகம் என்று கண்டுபிடிக்க பாகவதர் பாடல்கள் கேட்டிருந்தால் போதும். உதாரணமாக சிந்துபைரவி படத்தில் வரும் மரிமரி நின்னே பாடல் (தியாகராஜர் அதை அமைத்திருப்பது வேறு ராகத்த்தில். இளையராஜா இந்தப் பாடலை சாரமதி ராகத்தில் அமைத்திருப்பார்) பாகவதரின் 'உன்னையல்லால் ஒரு துரும்பசையுமோ' பாடல் சாரமதி. அதைக் கேட்டால் தெரியும்.
ReplyDeleteவாங்கோ ஶ்ரீராம்... அடடே அடடே... இராகங்களில் பரீட்சையம் உள்ள ஒருவர் வந்துவிட்டார் எனக்கு..! இனி வாழ்வுதான் :) :)
Deleteஎனக்கும் இராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே மிகவும் பிடிக்கும். தொடர்ந்து பேசுவோம்..!
அன்பான வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ ஶ்ரீராம்..!!!
காந்த கண்ணழகின்ற பேருக்கு பொருத்தமான ஆளு இந்தம்மாதான் சகோ
ReplyDeleteவாங்கோ ராஜி..!!
Deleteஉண்மைதான். கண்களாலேயே பல கதைகள் சொல்லிவிடுகிறார். மிக்க நன்றி வருகைக்கு..!!
ராமலிங்கம் (உங்கள் தந்தையார்தானே)காலத்து பாடல்களை றஜீவன் ரசிப்பது வினோதமா இருக்கு ஜி :)
ReplyDeleteவாங்கோ ஜீ... உண்மையில் இது அப்பா கலத்துப் பாட்டுத்தான். அப்பா பிறந்தது 1943 இல். ஹரிதாஸ் படம் வந்தது 1944 இல் :)
Deleteஎன்னுடைய அம்மாவும் அப்பாவும் தீவிரமான இசை ரசிகர்கள். அவர்கள் அக்காலத்தில் கேட்டு ரசித்தது, அப்படியே எனக்கும் வந்து விட்டது.