எமது ஆங்கிலக் கல்லூரியில் கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் நடத்தினோம். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எமது கல்லூரி செயல்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் பரீட்சைகளுக்கு மாணவர்களைத் தயார் செய்து, அவர்கள் சிறந்த பெறுபேறுபெற உதவுகிறோம்.
கடந்த ஆண்டு சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவின்போது எடுத்த புகைப்பட ஆல்பத்தைப் பார்க்கலாம் வாருங்கள்.
01, Starters பிரிவு மாணவர்களின் அசத்தல் நடனம் இது.
02, Disney பாடலாகிய FROZEN பாடலை Movers பிரிவு மாணவர்கள் குழுவாகப் பாடிய பொழுது.
இதில் இடமிருந்து வலமாக 7 வது இடத்தில் இருப்பவர் எனது மகள் இலக்கியா.
இதில் இடமிருந்து வலமாக 7 வது இடத்தில் இருப்பவர் எனது மகள் இலக்கியா.
03, உலகப் புகழ்பெற்ற சில பிரபலங்கள் மீண்டும் உயிரோடு வந்தால் அவர்கள் என்ன பேசுவார்கள் என்று ஒரு நகைச்சுவை நாடகம். அதில் ஹிட்லராக ஒரு மாணவன்.
( டயானா, அன்னை தெரேசா, மகாத்மா காந்தி போன்றோர் அடுத்த போட்டோவில் )
( டயானா, அன்னை தெரேசா, மகாத்மா காந்தி போன்றோர் அடுத்த போட்டோவில் )
04, மங்கள விளக்கேற்றிய போது...
05, ஆங்கிலத்தில் மின்னி முழங்கிய போது... :) :)
06, இடைவேளையின் போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அதிகாரிகளோடு சிற்றுண்டி..
07, பார்வையாளர்கள் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த Pepper Pot நாடகத்தில் எனது மாணவர்கள்.
குறிப்பு - ஆசிரிய தொழில் மிகவும் உயர்வானது. அதுவும் வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது. ஊரில் இருந்த போது, தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு தமிழினூடாக ஆங்கிலம் கற்பித்தேன்.
குறிப்பு - ஆசிரிய தொழில் மிகவும் உயர்வானது. அதுவும் வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது. ஊரில் இருந்த போது, தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு தமிழினூடாக ஆங்கிலம் கற்பித்தேன்.
ஆனால் இங்கு பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியினூடாக ஆங்கிலம் போதிப்பது மிகவும் சுவாரசியமான அனுபவம். இது குறித்து எழுத நிறையவே உண்டு. அவ்வப்போது எழுதுகிறேன்.
இதனைக் குறித்து இன்னும் எழுதுங்கள் நண்பரே.
ReplyDeleteவாங்கோ கில்லர் ஜீ.. இன்னும் நிறைய எழுத இருக்கு. எழுதுகிறேன். மாணவர் உலகம் அற்புதமானது.. நிரம்பவே சுவாரசியங்கள் கொண்டது.
Deleteஎழுதுகிறேன்...!
அனைத்தும் படங்களும் அருமை...
ReplyDeleteசுவாரசியமான அனுபவங்களை ரசிக்க காத்திருக்கிறேன்...
வாங்கோ சகோ டிடி..! பல சுவாரசியமான அனுபவங்கள் காத்திருக்கின்றன. தொடர்வோம்
Deleteஆஹா...அற்புதமான புகைப்படங்கள்
ReplyDeleteமிகவும் இரசித்தோம்
முடிந்தால் காணொளியாகப் பதிவிட்டால்
இன்னும் நன்றாகக்
கண்டு இரசிக்க முடியுமே
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்களுடன்...
மிக்க நன்றி சேர்... காணொளியும் இருக்கிறது. இன்னொரு பதிவில் தருகிறேன். மிக்க நன்றி சேர்
Deleteஇன்னும் அதிகமாக பகிர்வுகள் எதிர்ப்பார்க்கின்றேன் ஆங்கிலவாத்தியாரிடம் இருந்து! எனக்கும் ஆங்கிலத்துக்கும் அதிக தூரம்))) நல்லவேளை சிங்களம் தோழியாக வந்தால்))) நான் பிழைத்துக்கொண்டேன்)))
ReplyDeleteஆங்கிலம் மிகவும் இலகுவான மொழி பாஸ்..! வாங்க படிக்கலாம் :)
Deleteகற்பிக்கும் இந்த அனுபவங்கள் குறித்து இன்னும் அறிய ஆவல். உங்கள் மகள் இலக்கியாவுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சகோ ஶ்ரீராம். வாழ்த்துக்களை மகளுடன் பகிர்ந்து கொண்டேன். அவவுக்கும் மகிழ்ச்சி. நன்றி சகோ
Delete