Monday, 19 June 2017

புதிம் பார்க்கலாம் வாங்கோ....!

நண்பர்களே, நீங்கள் எல்லோரும் என் வீட்டுக்கு வந்தால், என்னுடைய ஆல்பத்தைக் காட்டுவேன் இல்லையா? நண்பர்கள், உறவினர்களுக்கு ஆல்பம் காண்பிப்பதே ஒரு சுகமான அனுபவம் தான். ஒவ்வொரு போட்டோவையும் காண்பித்து, அது தொடர்பான கதைகளைப் பகிர்வதில் அப்படி ஒரு சுகம்.


இந்த வலைப்பூவும் ஒரு வீடு மாதிரித் தானே? சரி, இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்திருக்கிறீங்க... இதோ என் ஆல்பத்தில் இருந்து சில போட்டோக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் :) :)

01, நேற்று தந்தையர் தினத்துக்கு மகள் இலக்கியா தந்த அன்புப் பரிசு இது. கப் ஒன்றிலே, நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த படம் ஒன்றைப் பதித்து, ஆங்கிலத்தில் வாழ்த்து எழுதி தந்திருந்தா. 10 நாட்களாக எனக்குச் சொல்லாம, இரகசியமா, அவவும் சித்தப்பாவும் சேர்ந்து செய்த பரிசு இது. மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.


02, அப்பா இப்போது வைத்திருக்கும் சைக்கிள். பார்க்கப் பார்க்க ஆசையாக, மீண்டும் இதை ஓடவேண்டும் போல இருக்கு. சைக்கிளில் கொழுவி இருக்கும் Bag எங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு பொருள். இப்படியான பைகளில் பொருட்கள் வாங்கிக்கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்த ஞாபகங்கள் வந்து போகுது. இதனை நாம் ‘பன் Bag' என்று அழைப்போம்.


03, எங்கள் குல தெய்வம் காளி அம்மனின் கோயில் இது. அண்மையில் இப்படி புனருத்தாரணம் செய்து, பூசை எல்லாம் செய்து அன்னதானம் கொடுத்தோம். வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அம்மனை நினைத்தால் போதும், மகிழ்ச்சியும் ஆறுதலும் தானே கிடைக்கும்.


04, நல்லதொரு வீடு கட்ட வேண்டும் என்பது எங்கள் நீண்ட வருட கனவாக இருந்தது. சிறிய வயதில் நாம் வசதி குறைந்தவர்களாக இருந்தமையால் எம்மால் ஒரு பெரிய வீட்டைக் கட்ட முடிந்திருக்கவில்லை. இப்போது கடவுளின் அருளால் ஒரு பெரிய வீட்டைக் கட்ட முடிந்துள்ளது. வீடு முழுவதும் மாபிள் பதிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது.


இது கட்டுமானப் பணிகள் நடைபெற்ற காலத்தில் தம்பி துவாரகன் எடுத்து அனுப்பிய படம்..! இப்பவே ஊருக்குப் போய், இந்த மாபிளில் படுத்து உருள வேண்டும் போல இருக்கிறது.

05, British Council அண்மையில் இங்குள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்றை நடத்தியிருந்தது. அதில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை சில ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள். அதில் அடியேனும் ஒருவன். அப்போது எடுத்த போட்டோ.....,

( இந்த நிகழ்வை வீடியோ வடிவில் தர வேண்டும் என்பது என் விருப்பம். விரைவில் வெளியிடுகிறேன் ).


06, அண்மையில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்குச் சென்ற வெள்ளைக்காரர்கள் சிலர் எமது கலாச்சார உடையில் கலக்கிய போட்டோக்கள் இவை. நண்பர் ஒருவர் எடுத்து அனுப்பியது. ஃபேஸ்புக்கிலும் முன்னர் பகிர்ந்திருந்தேன். நிறையப்பேர் Share பண்ணியிருந்தார்கள். அதில் இரண்டு படங்கள் உங்களுக்காக....07, ஒவ்வொரு முறையும் போர்ட்டில் எழுதும்போது அதை போட்டோ எடுத்து வைப்பது என் வழக்கம். இது Flyers பிரிவு மாணவர்களின் வகுப்பில் அண்மையில் எடுத்த படம். என் கையெழுத்து அழகாக இருக்கா? :) :)


என்ன நண்பர்களே, இன்றைய போட்டோக்கள் யாவும் உங்களுக்குப் பிடிச்சிருந்திச்சா? சரி, இதில்  க்ளிக் செய்தால் இதுபோன்ற இன்னொரு ஆல்பத்தை நீங்கள் காணலாம்.

22 comments:

 1. ஆவ்வ்.. சூப்பர் போட்டோஸ்.. இதுல அப்பாவோட சைக்கிள் பெரும் கதைகளை கொண்டது.

  😘😘

  சந்தோசங்களை அள்ளித்தரும் புகைப்படங்கள்!

  ஜெனிக்குட்டி.. 😘😘😘😘😘

  ReplyDelete
  Replies
  1. அந்த சைக்கிள் கதைய நீயே எழுதுறது..?? 😝😊

   Delete
 2. அந்த சைக்கிளில் கொழுவும் அந்த பாக் இன்னும் பல நினைவுகளை தூண்டுகின்றது சைக்கிள் அழகாய் இருக்கு)))

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இந்த சைக்கிளை இப்ப ஓடவேண்டும் போல இருக்கு 😊

   Delete
 3. இலக்கியாவின் அன்புப்பரிசு இன்னும் அழகாய் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஓம் பாஸ், எனக்கும் பிடிச்சிருந்தது.

   Delete
 4. பிரிட்டிஸ் கவுண்சில் படம் கோட்டு போட்டு சூப்பர் அழகு அடுத்த சினிமாவுக்கு நிச்சயம் சந்தர்ப்பம் கிடைக்கட்டும்)) எழுத்து அழகாய் இருக்கு என் எழுத்து கோழிகிளறினமாதிரி இருக்கும்)))

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்தும் அதே கோழி கிளறின கதைதான். ஆனால் இப்படியே போனால் பிள்ளைகள் பாவம் என்பதால் திருத்திக்கொண்டு வருகிறேன்.

   Delete
 5. ஆங்கிலேயர் நம்மவராக மாறும் அதிசயம் அதிகரிக்க நம்மவர்கள் அவர்கள் கலாச்சாரத்தில் புகுந்து தங்கள் அழகையும் ஆடைபாதி என்று சிலர் மாற்றுவதை சகிக்க முடியவில்லை)))

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான் பாஸ்

   Delete
 6. மகளின் அன்பு தனித்துவமானது. பாராட்டுகள். நானும் நீண்ட நாட்கள் சைக்கிள் பாவித்திருக்கிறேன். சமீப காலமாய்த்தான் இல்லை! அன்னதானம் தானங்களில் சிறந்தது. சீக்கிரமே வீட்டில் மாபிள் பதிக்க வாழ்த்துகள். சிறந்த ஆசிரியர் விருதுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். மென்மேலும் சிகரங்களை அடைய வாழ்த்துகள். வெளிநாட்டுக்காரர்கள் நம் கலாச்சார உடையில் - கலக்கல்ஸ். உங்கள் கையெழுத்து நிச்சயம் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அடடே, எல்லாப் போட்டோக்களையும் நன்கு கவனித்து, ஒரே கமெண்டில் பதில் எழுதியும் பாராட்டியும் இருக்கீங்க ஶ்ரீ... மிக்க மகிழ்ச்சி..!

   உங்களின் சைக்கிள் அனுபவங்களையும் அறிய ஆசை :)

   Delete
 7. சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்கும், பெறப்போகும் விருதுகளுக்கும் வாழ்த்துகள்.
  நினைவுகள் சங்கீதமே..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கில்லர்ஜி... :) நிச்சயம் மேலும் மேலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

   Delete
 8. நினைவுகளின் கலைப்பொக்கிஷமாய் படங்கள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அசோகன் சார். போட்டோக்களைப் பார்த்து நினைவுகளை மீட்டிக்கொள்வது ஒரு சந்தோசமே

   Delete
 9. ஒரு பதிவில் மிகச் சுருக்கமாக
  உங்களைப்பற்றிமிக முழுமையாக
  அறிந்து கொள்ளும்படியாக
  பதிவ் செய்த விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ரமணி ஐயா...புகைப்படங்களைக் காட்டி, கதை சொல்வது பகிழ்ச்சியான ஒரு அனுபவம். இதில் என்குறித்து நீங்கள் அறிந்துகொண்டமை மகிழ்ச்சி :) :)

   Delete
 10. வெள்ளைக் காரன் கை குட்டு பட்டு இருக்கிறீர்கள் ,வாழ்த்துகள் :)
  மார்பிளில் படுத்து உருளும் நாள் சீக்கிரமே வரட்டும் ஜி :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி பகவான் ஜீ... அந்த மாபிள் கதையை சற்றுமுன்னர் அம்மாவோடு பேசும் போது சொன்னேன். விரைவில் ஊருக்கு வாருங்கள் என்றா..! போகத் தடை ஏதும் இல்லை இப்போது... பார்ப்போம்

   Delete
 11. இலக்கியா கொடுத்த பரிசு அருமை...

  சொந்த வீடு கனவு நிறைவேறும் தருணம் சுகப்பிரசவம் மாதிரியான ஒரு அருமையான நிகழ்வு.

  குலதெய்வத்துக்கு ஈடான தெய்வம் ஏதுமில்லை. எல்லா தெய்வங்களும் கேட்ட பிறகுதான் வரம் கொடுக்குமாம்./ குலதெய்வம் மட்டும் வரம் கேட்கனும்ங்குறதுக்காகவே நம் வாசப்படியில் காத்திருக்குமாம்....

  கலாச்சார உடையில் வெள்ளையர் கொள்ளை அழகு...

  ReplyDelete