நூறுக்கும் மேற்பட்ட மியூசியங்கள் குவிந்துள்ள, இந்த பரிஸ் மாநகரின் இதயப் பகுதியில் உள்ள ஒரு மியூசியத்தில், வாழை, பலா, தென்னை, பனை மற்றும்,
ஊரிலே நாம் வளர்க்கும் பூக்கன்றுகள், செடிகள், கொடிகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து, நட்டு வைத்து, பசளை போட்டு, அழகாக நீரூற்றி, பக்குவமாக வளர்க்கிறார்கள்.
உள்ளே போனபோது, நான் நிற்பது ஐரோப்பாவிலே உள்ள நவநாகரிக நாடாகிய பிரான்ஸ் என்பதே மறந்து போய், எங்கள் ஊரில் நிற்பது போன்ற உணர்வே ஏற்பட்டது.
இதோ இந்தப் புகைப்படங்கள், உங்களுக்கும் அந்த உணர்வைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
இதோ இந்தப் புகைப்படங்கள், உங்களுக்கும் அந்த உணர்வைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
பூக்களை ரசிக்காதவர்கள் உண்டா ?
ReplyDeleteநான் சினிமா வில்லன் அல்ல ஷூக்காலால் பூக்களை நசுக்க..
ஸூப்பர் போட்டோஸ்.
வாங்கோ கில்லர்ஜி.
Deleteசரியா சொன்னீங்க.. பூக்களை யாராவது மிதித்தால் எனக்கும் கோபம் தான் வரும். அவற்றுக்கும் உயிர் உண்டு அல்லவா?
அழகிய படங்கள். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம். இவை உலர் வலைய காடுகளுக்குரியவை என்று எழுதி வைத்திருந்தார்கள்.
Deleteஉங்கள் உணர்வு சரியே
ReplyDeleteஇங்கே நான் இப்போது நியூஜெர்ஸியில்.
பச்சைப் பசேலென செடிகள் எங்கும்
இருந்தாலும் நம் ஊர் செடிகள் எதையும்
பார்க்க முடியாமல் இருப்பது
ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது
காக்கைகள் ஒன்று கூட இல்லாத
குறையைச் சிட்டுக் குருவிகள்
தீர்த்து வைத்துப் போகின்றன
அந்த வகையில் ரோஜாக்கள்
கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றன
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
வாழ்த்துக்களுடன்...
இங்கு வெளிநாட்டு நிலைமை அதுதானே ஐயா... என்றாலும் இவர்களும் நல்ல இயற்கை நேயம்மிக்கவராகவே இருக்கிறார்கள். அதனால் நாமும் கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது.
Deleteஉலர் வலைய காடுகளுக்குரியவை என்றாலும் உதிராமல் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கே ஜி :)
ReplyDeleteஅந்தளவுக்குப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறார்கள் ஜீ :)
Deleteபூக்களில் எத்தனை அழகு)) வாழையும் அழகாய் வளர்கின்றது . அழகான புகைப்படக் காட்சிகள்.
ReplyDeleteஇதெல்லாம் நீங்க பார்க்கோணும் பாஸ் :) நம்ம காட்டான் அண்ணனையும் கூட்டிக்கொண்டு வாங்கோ :) :)
Delete