Sunday 14 May 2017

முதல் பதிவு : ஆலயம் தொழுவது....!

வணக்கம் நண்பர்களே..

மூன்று பரிசோதனைப் பதிவுகளைத் தொடர்ந்து, இதோ என்னுடைய முதலாவது பதிவை உங்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.

பிரான்சிலே 13 மாகாணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் - ils de France.
இந்த மாகாணத்தில் 8 மாவட்டங்கள் உள்ளன. அதில் ஒரு மாவட்டம் தான் பரிஸ். உண்மையில் பரிஸ் ஒரு நகராகவும் அதேவேளை மாவட்டமாகவும் உள்ளது. இதன் இலக்கம் 75 ஆகும்.!




அதேபோல 77, 78, 91, 92, 93, 94, 95 ஆகிய இலக்கங்களை உடைய ஏனைய மாவட்டங்களும் இந்த ils-de-France மாகாணத்தில் உள்ளன. இந்த மாவட்டங்கள் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தாலும் 93 வது மாவட்டத்திலேயே அதிகம் பேர் வாழ்கிறார்கள்.
ஆயினும் இப்போது இவற்றுக்கு வெளியே, ஏனைய மாகாணங்களிலும் தமிழர்கள் வெகுவாக காலூன்றத் தொடங்கியுள்ளார்கள். தலைநகர் பரிசில் இருந்து பலநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏனைய நகரங்கள், கிராமங்களில் எல்லாம் தமிழ்க்காற்று வீசத் தொடங்கியுள்ளது.




இங்கே நான் பகிர்ந்துள்ள படங்கள், பரிசில் இருந்து 178 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் TROYES நகரில் உள்ள 'சித்தி விநாயகர்' ஆலயத்தில் எடுக்கப்பட்டவை. இங்கே 50 வரையான தமிழ் குடும்பங்கள் உள்ளனவாம்.



60 000 மக்களைக் கொண்ட இந்த நகரில் 1500 ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மர வீடுகளை இன்றும் காணலாம். இங்கேதான் பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமாகிய La Coste இன் தலைமையகம் உள்ளது.



இதுபோல ஏனைய தூரத்து நகரங்களில் எல்லாம் தமிழர்கள் குடியேறிவருகிறார்கள். அங்கெல்லாம் கோயில்கள், தமிழ் பாடசாலைகள், தமிழ் கடைகள் உருவாகிவருகின்றன.

தமிழர்கள் வாழும் இடம் எங்கும்  தமிழும் சைவமும் செழித்து வளரும் என்பதில் ஐயமில்லை..! 
x

4 comments:

  1. தகவல்கள் அருமை நண்பரே பலருக்கும் பயன் பெறும் நன்றி - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர் ஜீ வாங்க.... முதலாவது பதிவின் முதலாவது கமெண்டோடு வந்திருக்கீங்க.. வருக வருக..!

      Delete
  2. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வாக்கினை மெய்ப்பிக்கின்றனர் நம் உறவுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் அண்ணா... இப்போது ஐரோப்பா எங்கும் கோயில்கள் தான்..!!

      Delete