Wednesday 31 May 2017

படித்து ரசித்த தத்துவங்கள்...!!

தத்துவங்களைப் படிப்பதுபோல ஒரு சுகமான அனுபவம் வேறேதும் உண்டா? அதுவும் வாழ்க்கை சோகமாக இருக்கும் போது, ஏமாற்றங்கள் மீண்டும் மீண்டும் வரும்போது, நாம் படிக்கும் ஒவ்வொரு தத்துவமும் தேனாய் இனிக்கும்..!


நான் அடிக்கடி வாசிக்கும் சில தத்துவங்களை இங்கே எழுதுகிறேன். இவை என்னுடையவை அல்ல..! என் மெயிலுக்கு வந்தவை..! தத்துவங்களை நேசிக்கும் ஒருவரால் தொகுக்கப்பட்டவை..!! :) :)

01, “ கோபம் முதற்கட்டத்தில் 
வென்றதுபோல் தெரிந்தால் 
நிரந்தரமாகத் தோல்வியடையப் 
போகிறது  என்று பொருள்’

02, “ எது நடக்கக்கூடாது என்பதற்காக 
நீ கோபப்படுகிறாயோ - நீ
கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே
காரணத்திற்காக - அது 
நடந்தே விடுகிறது’’

03, காட்டில் மட்டும்தானா முள் இருக்கிறது?
அது றோட்டிலும் இருக்கிறது.
பார்த்து நடப்பவன் 
காட்டிலும் நடக்க முடியும்
பாராமல் நடப்பவன் 
றோட்டில்கூட நடக்க முடியாது’’

04, நாய் தன் நாக்கை ஆட்டாமல் 
வாலை ஆட்டுவதினால்தான் 
அதற்கு நிறைய நண்பர்கள் 
இருக்கிறார்கள். 

05, ஆண்டவனுக்கு 
இரண்டு உறைவிடங்கள்....!
ஒன்று சொர்க்கம்
மற்றொன்று நன்றியுள்ள 
மனிதனின் இதயம்

6 comments:

  1. ஸூப்பர் நண்பரே அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர் ஜீ... தத்துவங்களைப் படிப்பது ஒரு சுகம். இல்லையா?

      Delete
  2. அட...! ம்... அனைத்தும் நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி.. நன்றி நன்றி :)

      Delete
  3. நானும் நாய் போலவே இருக்க விரும்புறேன் ,ஆனால் வாலாட்டினால் ஓட்ட நறுக்கி விடுவார்களே ஜி :)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா வாலாட்டுறதுல சில டெக்னிக் இருக்கு ஜீ..! அதெல்லாம் கத்துக்கணும் :)

      Delete