Friday 16 June 2017

ங்கே லும்புள் விற்கப்படும்....!

பிரான்சில் தலைநகர் பரிசிலே, நிலத்துக்கு கீழே 250 கிலோமீட்டர் நீளத்துக்கு மனித எலும்புக் கூடுகள் அடுக்கி வைத்துள்ளார்கள் என்று கடந்த வாரம் பதிவு போட்டிருந்தேன் அல்லவா?  என்னது மறந்துட்டீங்களா? - அப்டீன்னா இவ்டே :) :)  க்ளிக் செய்து ஒரு எட்டுப் பார்த்துட்டு வாங்க..!!

தனியே மனிதனுடைய எலும்புக் கூடுகளை மட்டும் மியூசியத்தில் வைத்தால் ஏனைய விலங்குகள் கோபித்துவிடும் அல்லவா?


அதனால் இன்னொரு மியூசியத்தில், யானை முதல் பூனை வரை சகல விலங்குகளினதும் எலும்புக் கூடுகளை  அடுக்கி வைத்திருக்கிறார்கள் :) :) 

இங்கே குரங்கு, திமிங்கிலம், கடற்குதிரை, ஒட்டகச்சிவிங்கி என்று ஊரிப்பட்ட விலங்குகளின் கூடுகள் உண்டு. 

‘அட, எலும்புக்கூட்டுக்குப் பொறந்தவைங்களா?’ என்று திட்ட வேணும் போல இருக்கா..? :) :) சரி வாங்க, முதல்ல மியூசியத்த பார்ப்போம். அப்புறம் திட்டலாமா? வேணாமான்னு யோசிப்போம்.














குறிப்பு - இங்கே மாணவர்கள் தான் அதிகம் வருகிறார்கள். அவர்கள் இங்குள்ள எலும்புக் கூடுகள் குறித்துக் குறிப்புக்கள் எடுப்பதும், இவற்றைப் பார்த்து வரைவதுமாக இருந்தார்கள்..! 

19 comments:

  1. இது என்ன ரசனை எனப் புரியவில்லையே
    அவர்களுக்கு இப்படி எலும்பின் மீது
    சொல்லமுடியாத காதல் வர வேறு
    சரித்திர ரீதியான காரணம் ஏதும்
    இருக்கச் சாத்தியமா ?
    இல்லையெனில் இத்தனைப் பிரமாண்டமாய்
    இருக்கவும் பராமரிக்கவும் சாத்தியம்
    இல்லையே
    படத்தில் பார்க்கவே இத்தனை
    மலைப்பாய் இருக்கிறது
    படங்களுடன் பதிவு நேரடியாகப்
    பார்க்கிற அனுபவம் தருகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி ஐயா..!!

      இந்தப் பிரெஞ்சுக்காரர்களின் ரசனையைப் புரிந்துகொள்வது கஷ்டம் ஐயா... இவர்கள் ரசிக்காத ஒரு விஷயம் இந்த உலகில் இல்லை.

      இன்னும் நிறைய போட்டோக்களும் தகவல்களும் வைத்திருக்கிறேன். குறிப்பாக அடுத்த பதிவில் வரும் படங்கள் உங்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும்.

      Delete
  2. தங்கள் அனுமதியை எதிர்பார்த்து
    இதை என் முக நூலில் பகிர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் ஐயா மிக்க மகிழ்ச்சி.

      நன்றி ஐயா

      Delete
  3. சுவாரஸ்யம்தான். ஒவ்வொன்றின் அருகிலும் இருக்கும் குறிப்புச் சீட்டை போட்டோ எடுத்திருக்கக் கூடாதோ? பெரிய ஆமை போல இருப்பது என்ன என்று தெரியவில்லையே... (கடைசிக்கு முதல் படம்)

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஶ்ரீராம். அருகிலே பிரெஞ்சில் தான் எழுதி வைத்திருப்பார்கள். இனிமேல் படங்களோடு சேர்த்து, அதுகுறித்த தகவல்களையும் பகிர்கிறேன்.

      Delete
  4. பிரமிப்பாக இருக்கிறது ஷோகேசில் வைத்து பார்த்தால் மியூசியம்
    சுடுகாட்டில் வைத்து பார்த்தால் பேய்
    விநதை உலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா சரியா சொன்னீங்க கில்லர்ஜி.

      அப்புறம் பிரெஞ்சுக்காரரின் பேய் ரசனை இருக்கிறதே... அது ஒரு தனிக்கதை.

      Delete
  5. அருமையான காட்சிகள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அசோகன், மிக்க நன்றி உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  6. இதுவரை போனாதில்லை ஒரு நாள் போவோம்))) காட்சிகள் அழகாய் இருக்கு கொஞ்சம் பயமாகவும் இருக்கு நம் இனங்கள் இருப்பதால்)))

    ReplyDelete
    Replies
    1. கார் ஒஸ்டேலிக்கு முன்னால தான் இந்த மியூசியம் இருக்கு. வாங்கோ ஒருநாளைக்கு விசிட் அடிப்பம் :) :)

      Delete
  7. இதை சுற்றிப் பார்க்கவே ஒருநாள் தேவைப்படும் போலிருக்கே ஜி :

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஜீ... ஒவ்வொன்றாகப் பார்ப்பதென்றால் ஒருநாள் ஆகும் தான் :)

      Delete
  8. அருமையான தகவல், பார்க்க தூண்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வேலு ஜீ. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  9. மிகவும் பயனுள்ள தகவல் நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete